யூடியூபர் வாங்கிய ஆடம்பர பங்களா.. விலையை கேட்டா ஆடிப்போயிருவீங்க..!
இந்தியாவில் இப்போது பல்வேறு வகையான சோசியல் மீடியா இன்ப்ளூயன்ஸர்கள் மற்றும் யூடியூபர்கள் உள்ளனர். இதில் புவன் பாம் என்பவர் மற்றவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு நாட்டின் மிகவும் பணக்கார யூடியூபராக வளர்ந்துள்ளார்.டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் புவன் பாம் ஒரு பங்களாவை ரூ.11 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளார்.
இந்த சொத்தின் பத்திரப்பதிவு செலவு ரூ.77 லட்சம் ஆகும். மொத்தம் 2233 சதுர அடி பரப்பளவில் இந்த பங்களா அமைந்துள்ளது. இந்த பங்களாவை 2023 ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று புவன் பாம் விலைக்கு வாங்கினார். பிபி கி வைன்ஸ் என்ற குறு விடியோ நகைச்சுவை தொகுப்பை புவன் பாம் வெளியிட்டு பிரபலம் அடைந்தார். அதில் அவரும் பல்வேறு கேரக்டர்களில் நடித்துள்ளார். ஷோ பிஸினசில் புவன் பாம் ஒரு கிடாரிஸ்டாக அறிமுகம் ஆனார்.
இப்போது அவர் நாட்டின் பணக்கார யூடியூபராக உள்ளார். யூடியூபில் அவர் அதிகளவில் சம்பாதித்து வருகிறார்.குஜராத்தின் வடோதராவை சேர்ந்த புவன் பாம் தனது இசை திறனின் மூலமாக மக்களிடையே நல்ல பேரை பெற்றுள்ளார். தொடக்கத்தில் ஹோட்டல்கள், கபேக்களில் ஒரு இசைக் கலைஞராக புவன் பாம் வேலை செய்துள்ளார். மாதத்துக்கு ரூ.5000 சம்பாதித்து வந்தார்.தற்போது புவன் பாமின் நிகர சொத்து மதிப்பு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இந்திய மதிப்பில் ரூ.122 கோடி ஆகும்.அவரது பிராண்டு, வெப் சீரீஸ்கள், மூவி ரோல்கள், யூடியூப் விடியோக்கள் மூலம் வருவாய் போன்றவற்றின் மூலம் அவர் சம்பாதித்து வருகிறார்.புவன் பாமின் முழுப் பெயர் புவன் அரவிந்த்ர ஷங்கர் பாம். 1994 ஜனவரி 22 ஆம் தேதி பிறந்தார். இந்தியன் காமெடியன், எழுத்தாளர், பாடகர், நடிகர், பாடலாசிரியர், யூடியூப் பிரபலம் போன்ற பன்முகத் தன்மையை புவன் பாம் கொண்டுள்ளார்.
அவரது காமெடி சானலான பிபி கி வைன்ஸ் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.2018 ஆம் ஆண்டிலேயே 10 லட்சம் சப்ஸ்கிரைபர்களை பெற்ற இந்தியாவின் முதல் யூடியூபர் என்ற பெருமையைப் பெற்றார்.அவர் வெளியிட்ட ஒரு விடியோ மூலம் பாகிஸ்தானில் மிகவும் பிரபலம் அடைந்தார் புவன். இதைத் தொடர்ந்து அவர் தனக்கென்று ஒரு யூடியூப் சேனலை 2015 ஜூன் 21 ஆம் தேதி தொடங்கினார்.
புவிசார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு இந்திய அரசின் பல்வேறு பிரிவுகளுடன் புவன் இணைந்துள்ளார்.அதன் மூலம், பொது புவிசார் தரவுகளை காட்சிப்படுத்தல் மற்றும் மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ர தகவல்களை ஹோஸ்ட் செய்ய புவனை இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.இது தவிர மிந்த்ரா, மிவி, ஃபேப்ரூம், ஆர்க்டிக் பாக்ஸ், பியார்டோ, லென்ஸ்கார்ட், டிஸ்ஸாட் போன்ற பிராண்டுகளுடனும் புவன் தொடர்பு வைத்துள்ளார்.