மு.க. ஸ்டாலினுடன் இந்திய தூதர் தினேஷ் சந்திப்பு..!
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக ஸ்பெயின் சென்றடைந்த முதல்வர் மு.க. ஸ்டாலினை அந்நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் தூதரக அதிகாரிகளோடு மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 8 நாட்கள் அரசுமுறை பயணமாக ஸ்பெயின் சென்றுள்ளார். அங்கு நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடுக்கு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில் ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினை ஸ்பெயின் – தலைநகர் மேட்ரில் இந்திய தூதர் தினேஷ் கே.பட்நாயக் நேற்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முதல்வர் ஸ்டாலின் உடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, தொழில் துறை செயலாளர் அருண்ராய் உள்ளிட்டோர் இருந்தனர்.
ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் பற்றியும், தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்றவற்றின் சிறப்பம்சங்களை விளக்கி, தமிழ்நாட்டில் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.