மாதவரம் டூ ரெட்டேரி மெட்ரோ ரயில் சேவை விரைவில் துவங்குகிறது! இதை யாருமே எதிர்பார்க்கலயே!
சென்னையில் நடந்து வரும் 2ம் கட்ட மெட்ரோ கட்டுமான பணிகள் குறித்த ஒரு முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி மாதவரம் முதல் சோளிங்கநல்லூர் வரை கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பாதையில் வரும் 2026-ம் ஆண்டில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மெட்ரோ ரயில் சேவை என்பது தற்போது மிக முக்கியமான சேவையாக மாறிவிட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். அவர்களுக்கான பயணத் தேவையை எல்லாம் இந்த மெட்ரோ ரயில் தான் பூர்த்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை என்பது மிக முக்கியமான பங்காக செயல்பட்டு வருகிறது.
தற்போது சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை என்பது இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னையில் புதிதாக மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகளை அமைக்கும் பணியை 2ம் கட்ட மெட்ரோ பணியாக செய்து வருகிறது. இதற்காக பணம் ஒதுக்கப்பட்டு வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன.
இதன்படி தற்போது மாதவரம் முதல் சிப்காட் வரையிலும், லைட்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலும் மாதவரம் முதல் சோளிங்கநல்லூர் வரையிலும் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. இதில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை உள்ள மெட்ரோ ரயில் பாதையில் எலிவேட்டட் மெட்ரோ பாதையான 44.6 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் பாதை என்பது விறுவிறுப்பாக பணி நடந்து வருகிறது.
இந்தப் பகுதியில் தற்போது மெட்ரோ தண்டவாளம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஈச்சங்காடு முதல் வெள்ளக்கால் வரையில் தற்போது தண்டவாளங்கள் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கான திட்டத்தில் மாதவரம் முதல் ரெட்டேரி வரையிலான ரூட்டில் முதலில் ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 2026-ம் ஆண்டு இந்த ரோட்டில் ரயில் பயணம் துவங்கும் என திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பகுதிகளெல்லாம் தயாராகும்போது மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் பணிகளில் கொளத்தூர் முதல் வில்லிவாக்கம் வரையில் பூமிக்கு அடியில் திட்டமிடப்பட்டுள்ள பணி மட்டுமே தொய்வு ஏற்பட்டுள்ளது.
மற்ற பணிகள் எல்லாம் துரிதமாக நடந்து வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி என்பது சுமார் 115 கிமீ நீளத்திற்கு மெட்ரோ ரயில் பாதைகளை அமைக்கும் பணியாக உள்ளது மாதவரம் முதல் கோயம்பேடு வரையிலும் கோயம்பேடு முதல் உள்ளகரம் வகையிலும் உள்ளகரம் முதல் எல்கார்ட் வரையிலும் திட்டமிட்ட பணிகள் தற்போது மிகச் சரியாக நடந்து வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் பூந்தமல்லியில் இருந்து போரூர் இடையேயான மெட்ரோ பணிகளை துரிதமாக முடிக்கவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முயற்சிகளை செய்து வருகிறது 2025-ம் ஆண்டு இந்த பணிகளை முடித்து மெட்ரோ ரயில் இயக்கலாமா என திட்டமிட்டு வருகிறது. இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது.
எது எப்படி இருந்தாலும் இன்னும் ஓரிரு வருடங்களில் சென்னையில் மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் மூலம் இணைக்கப்பட்டு சென்னை மிக சிறப்பான அளவில் வளர்ச்சியை பெற்றுவிடும். மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் எதிர்காலத்தில் சென்னையில் மெட்ரோ மிக முக்கிய தேவையாக இருக்கும்.