தேனீக்கள் தேனால் அபிஷேகம் செய்த மதுவனேஸ்வரர்!

கயிலை மலையில் சகல சாஸ்திரங்களையும் புராணங்களையும் உணர்ந்தவர் சூத மகாமுனிவர். சதானந்தன் முதலிய முனிவர்கள் சூத மகா முனிவரை வணங்கி புத்தியையும் முக்தியும் வழங்கும் சிதலங்களை பற்றி கேட்டறிந்தனர்.

அப்போது சூத முனிவர் திரு நன்னில பகுதியில் உள்ள இந்த திருத்தலத்தைப் பற்றி எடுத்துரைத்தார். கிருத யுகத்தில் சந்திர குலத்தில் தோன்றியவன் சோமபுரியை ஆட்சி செய்த பிருஹத் என்ற அரசன். இவன் தன் பதவியையும் அரசபதவியையும் தன்னுடைய எதிரிகளால் இழந்தான். பின்னர் அவன் திருநள்ளாறு பகுதிக்கு வந்து தவம் இயற்றினான். அவனுக்கு இத்தலத்தில் சிவபெருமான் காட்சியளித்து அருள் பாலித்தார்.

மன்னனின் வேண்டுகோளின்படி தளத்தில் இறைவன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். மேலும் சிவபெருமான் தன்னுடைய சூலாயுதம் கொண்டு இங்கே ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினார். அதில் தன் சடை முடியில் உள்ள கங்கையை கொண்டு நீரை நிரம்பச் செய்தார். அந்த குளத்திற்கு ‘பிருஹத்கங்கை’ என்று பெயர் பிரம்மன் தன் தொழில் நலம் பெற வேண்டி இந்த திருத்தலத்திற்கு வந்து சிவனை வழிபட்டுள்ளார். மேலும் தானே ஒரு சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டுள்ளார். அந்த லிங்கத்திற்கு பிரம்ம லிங்கம் என்று பெயர். இந்த லிங்கத்தை வழிபாடு செய்பவர்களுக்கு தொழிலில் மேன்மையும் நன்மையும் வந்து சேரும். அகத்தியரும் இத்தல இறைவனான மதுவனேஸ்வரரை வழிபாடு செய்துள்ளார். அகத்தியர் தனியாக பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கத்திற்கு அகத்தீஸ்வரர் என்று பெயர்.

பழங்காலத்தில் இந்த ஆலயம் திரு நன்னிலத்து பெருங்கோவில் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தை கோட்செங்கச் சோழன் என்ற மன்னன் எழுப்பி உள்ளான். யானைகளால் ஏற முடியாத மாடக்கோவில்களில் இதுவும் ஒன்று. தொடக்க கால கோவில்கள் மரத்தாலும் பின்னர் சுடுமண்ணாலும் கட்டப்பட்டன. வல்லவர் காலத்தில் கருங்கர்களால் கோவில்கள் கட்டப்பட்டன. பிற்காலச் சோழர்கள் சோழநாட்டில் பெரும்பாலான கோவில்களை கருங்கற்களால் கட்டித் திருப்பணி செய்தனர். இவர்களில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட திருக்கோவில்கள் ஏராளமான இருக்கின்றன .

ஒரு காலத்தில் சிலந்தி ஒன்று தன்னுடைய நூலினை கொண்டு சிவலிங்கத்திற்கு மேல் பகுதியில் பந்தல் அமைத்தது. அதே சிவலிங்கத்தை தினமும் வழிப்பட்டு வந்த யானை கோவிலுக்குள் இது என்ன சிலந்தி வலை என்று அதனை பிரித்து எறிந்தது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *