மதுரை குலுங்குது… உலகமே பார்க்குது… இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பம்! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்!

துரை முழுவதுமே ஒரே சமயத்தில் திரண்டு வந்திருக்கும் மக்கள் வெள்ளத்தில் குலுங்குகிறது. திரும்பும் இடங்களில் எல்லாம் திருவிழா தான்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் நேற்று முன் தினமும், நேற்று பாலமேடு பகுதியிலும் பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைப்பெற்ற நிலையில், இன்று ஜனவரி 17ம் தேதி காலை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்க உள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டை முனியாண்டி திடலில் இன்று விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சங்கீதா சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நாளான இன்று ஜனவரி 17ம் தேதி அலங்காநல்லூர் வாடிவாசல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருக்கும்.

சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு அலங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் மூடப்பட்டிருக்கும். மொத்தமாக அலங்காநல்லூர் வாடிவாசலை சுற்றியுள்ள 7 மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும். அத்துடன் அந்த நாட்களில் மதுபான விற்பனை சில்லறைகள் தடை மீறி ஏதும் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *