மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ருக்மணி தேர்வு.. யார் இவர் தெரியுமா?

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழுத்தலைவராக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக கருமுத்து கண்ணன் சுமார் 18 ஆண்டுகள் பதவி வகித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு மே 23-ம் தேதி காலமானார். இதனையடுத்து அறங்காவலர் குழு தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில் கோவிலின் இணை ஆணையர் செல்லத்துரையே அறங்காவலர் குழு தலைவராக இருப்பார் என இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது.

இதற்கிடையில், மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் பதவியை பிடிக்க பெருநிறுவனங்களின் தொழிலதிபர்களிடையே கடும் போட்டி நிலவி வந்தது. பின்னர், 5 பேரை அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இதில் அமைச்சர் பழனிவேல் தியாராஜன் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜன் (83), பி.கே.எம்.செல்லையா (73), சீனிவாசன், எஸ்.மீனா, சுப்புலட்சுமி ஆகிய 5 பேர் நியமனம் செய்யப்பட்டு டிசம்பர் 1ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டனர்.

ஆனால் அன்றைய தினம் அறங்காவலர்குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்நிலையில், அறங்காவலர் குழு தலைவராக செல்லத்துரை தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாரான ருக்மணி பழனிவேல் ராஜனை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *