Magalir Urimai Thogai: மகளிா் உரிமைத் தொகை .. மேல்முறையீடு செய்தவா்களுக்கு குட் நியூஸ்!

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாதுரை பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சுமார் ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ரூ.1 கோடியே 6 லட்சத்துக்கும் அதிகமானோர் உரிமைத் தொகை பெற்று வரும் நிலையில், மேலும் 11 லட்சத்து 85 ஆயிரம் போ் மேல்முறையீடு செய்திருந்தனா். அவற்றை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும், கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த 8 தாசில்தாா்கள் உள்பட மேலும் 323 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இந்தநிலையில், தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்த மாதமே உரிமை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 1.06 கோடி பேருக்கும், 2ஆம் கட்டமாக நவம்பரில் 7.35 லட்சம் பேருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து 3 ஆம் கட்டமாக இந்த மாதம் தகுதியுள்ளவர்களுக்கு உரிமை தொகை வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மகளிா் உரிமைத் தொகை கோரி மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களின் வங்கி கணக்கில் இம்மாதமே உரிமை தொகை வரவு வைக்கப்படும் என எதிா்பார்க்கப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *