மகரஜோதி தரிசனம்… சபரிமலையில் கூடாரம் அமைத்து குவியத் தொடங்கும் பக்தர்கள்… !
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஜனவரி 15ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. சபரிமலையில் அன்றைய தினம் அதிகாலை 2.46 மணிக்கு மகர சங்ரம பூஜையுடன் வழக்கமான பூஜைசிறப்பு நெய் அபிஷேக வழிபாடு நடைபெறும்.
பிற்பகலில் நடைபெறும் உச்சிகால பூஜைக்குபிறகு 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். பிற்பகலுக்கு பின் கோவிலை சுற்றி தண்ணீர் தெளித்து சன்னிதானம் முழுவதும் தூய்மை பணிகள் நடைபெறும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு ஐயப்பன் திருவாபரண அலங்காரத்தில் காட்சி தருவார். அதே சமயத்தில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பக்தர்கள் மகரஜோதியை காண வசதியாக இப்போதே சபரிமலையின் நாலாபக்கமும் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி வருகின்றனர்.
இது குறித்து சபரிமலை தேவசம்போர்டு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ” மகர ஜோதியை காண வசதியாக பக்தர்களுக்கு சபரிமலையில் 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. மகரவிளக்கு தினத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஜோதியை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு மகரவிளக்கு தினத்தில் அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்க தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.