மகாசிவராத்திரி…ஈரோடு கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு

மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியானது, மகா சிவராத்திரியாக வழிபடப்படுகிறது. அன்றைய தினம் சிவாலயங்களில் மாலை, இரவு, நள்ளிரவு மற்றும் அதிகாலை என நாலு வேளையும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெறும்.இந்த ஆண்டு பிரதோஷத்துடன் கூடிய சிவராத்திரி என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதேபோல் ஈரோட்டில் கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், மகிமாலீஸ்வரர் கோயில் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர், சாவடிபாளையம் நட்டாரிசுவரர், பெருந்துறை சோளீஸ்வரர், அம்மாபேட்டை மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவில், அந்தியூர் மாதேஸ்வரன், சக்தி பவானிசாகர் உள்ளிட்ட அனைத்து ஈஸ்வரன் கோயில்களிலும் நாளை மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் செய்து வருகிறார்கள் அந்தந்த கோவில் நிர்வாகிகள்.
தொடர்ந்து இரவு ஏழு முப்பது மணிக்கு இரவு 10:30 மணி நள்ளிரவு 12:20 மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெறும் குறிப்பாக நள்ளிரவு 12 :20 மணிக்கு நடக்கும் பூஜையில் மூலவருடன் மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது. நான்கு கால பூஜைகள் தான் சிறப்பு வாய்தது ஈரோட்டில் மகாசிவராத்திரி விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.