XUV300 மீது ரூ.1.28 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் மஹிந்திரா நிறுவனம்… விவரம் உள்ளே!

மஹிந்திரா நிறுவனம் இந்த பிப்ரவரி 2024 மாதத்தில் அதன் பயணிகள் வாகன வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாடல்களுக்கு கணிசமான தள்ளுபடியை வழங்கி வருகிறது. அந்த வகையில் நிறுவனம் தனது பிரபல XUV300 கார்களுக்கும் சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது. இந்த மாதம் மஹிந்திராவின் XUV300-ஐ வாங்குபவர்கள் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ஃப்ரீ அக்சஸரீஸ் உள்ளிட்ட பல மூலம் பயனடையலாம்.

இன்னும் சில நாட்களில் மஹிந்திரா நிறுவனம் XUV300-ன் ஃபேஸ்லிஃப்டட் வெர்ஷனை அறிமுகப்படுத்த தயாராகி வரும் நிலையில், ஃபேஸ்லிஃப்ட் அறிமுகத்திற்கு முன்னதாக முடிந்தவரை ஏற்கனவே இருக்கும் XUV300 மாடலின் ஸ்டாக்ஸ்களை விற்று காலி செய்ய நிறுவனம் விரும்புகிறது.

எனவே XUV300 கார்களுக்கான சலுகை பலன்களை கேஷ் டிஸ்கவுண்ட்ஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் டிஸ்கவுண்ட்ஸ், எக்ஸ்டன்டட் வாரன்டி, காம்ப்ளிமென்ட்ரி அக்சஸரீஸ் போன்ற வடிவங்களில் நிறுவனம் வழங்குகிறது. XUV300 வாகனமானது ரூ.82,000 வரை கேஷ் டிஸ்கவுண்ட் மற்றும் அதிகபட்சம் ரூ. 1.28 லட்சம் வரையிலான மொத்த தள்ளுபடி பலன்களுடன் இந்த பிப்ரவரி மாதத்தில் கிடைக்கிறது. எனினும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட் மற்றும் வாங்கும் லொக்கேஷனை பொறுத்து தள்ளுபடி தொகை மாறுபட கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தவிர XUV300 மீதான சலுகைகள் இந்த மாத இறுதி அல்லது ஸ்டாக்ஸ்கள் தீரும் வரை மட்டுமே செல்லுபடியாகும்.

5 ட்ரிம்ஸ்களில் வழங்கப்படும் XUV300 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.99 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை செல்கிறது. ஃபுல்லி ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் , ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் டெயில்கேட் ரிலீஸ் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பல் அம்சங்கள் Mahindra XUV300 காரில் உள்ளன. இதிலிருக்கும் பாதுகாப்பு அம்சங்களில் என்ட்ரி-லெவல் வேரியன்ட்டில் ஸ்டாண்டர்டாக 2 ஏர்பேக்ஸ்களும், டாப் வேரியன்ட்டில் 6 ஏர்பேக்ஸ்களும் உள்ளன.

XUV300 வாகனமானது 109bhp மற்றும் 200Nm பீக்டார்க்கை உருவாக்கும் 1.2-லிட்டர் பெட்ரோல் எஞ்சினை கொண்டுள்ளது. அதே நேரம் டர்போ-பெட்ரோல் derivative-ஆனது 129bhp பவர் மற்றும் 230Nm பீக்டார்க்கை உற்பத்தி செய்கிறது. இதன் டீசல் எஞ்சின் 115bhp பவரையும், 300Nm பீக் டார்க்கையும் வழங்குகிறது. இந்த காரின் அனைத்து எஞ்சின் வேரியன்ட்ஸ்களும் AMT அல்லது மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன. இந்த நிலையில் மஹிந்திரா நிறுவனம் XUV400 எலெக்ட்ரிக் SUV மீதும் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. டாப்-ஸ்பெக் EL வேரியன்ட் ரூ.4.4 லட்சம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கிறது, அதே சமயம் EL ESC வேரியன்ட் ரூ.3.4 லட்சம் மதிப்புள்ள பலன்களைப் பெறுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *