5-டோர் தார் அர்மாடவின் அறிமுகத்தை உறுதி செய்த மஹிந்திரா

மஹிந்திராவின் தார் எஸ்யூவி மாடலில் கூடுதலாக 5-டோர் பெற்ற தார் அர்மடா அறிமுகம் ஜூன் அல்லது ஜூலை மாதம் நடைபெறும் என நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ ராஜேஷ் ஜெஜூரிகர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து நாடு முழுவதும் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற தார் எஸ்யூவி 5 கதவுகளை பெற்ற மாடல் மீதான எதிர்பார்ப்பு பரவலாக அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முக்கிய விபரங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது.

5 டோர் தார் எஸ்யூவி பற்றி சில முக்கிய விவரங்கள்

2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் mStallion என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் mHawk என்ஜின் என இருவிதமான ஆப்ஷனில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது.

5-டோர் மஹிந்திரா Thar எஸ்யூவி இண்டிரியரில் 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் Adrenox கனெக்ட்டிவ் வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

4X4 ஆல் வீல் டிரைவ் உடன் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக அமைந்திருக்கும்.

தோற்ற அமைப்பில் மாறுபட்ட கிரில் பெற்ற வட்ட வடிவ எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் உடன் இணைந்த பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் உள்ளன.

டேஸ்கேம், சன்ரூஃப், பின்புற இருக்கைகளுக்கு ஆர்ம்ரெஸ்ட் உள்ளிட்ட வசதிகளும் பெற உள்ளது.

தற்பொழுது விற்பனையில் உள்ள 3 கதவுகளை பெற்ற தார் எஸ்யூவி மாடலுக்கு அமோகமான வரவேற்பு உள்ளதால் முன்பதிவு எண்ணிக்கை 71,000க்கு மேல் உள்ளதால் டெலிவரி தொடர்ந்து காலதாமதமாகி வருகின்றது. தற்பொழுது காத்திருப்பு காலம் 4×2 டீசல் மாடல்களுக்கு 6 மாதங்கள் வரை உள்ளது. குறைவான காத்திருப்பு காலம் 4×4 மாடலுக்கு 2-3 மாதங்களாகவும் உள்ளது.

புதிதாக வரவுள்ள 5-டோர் மஹிந்திராவின் தார் எஸ்யூவிக்கு பிரத்தியேகமாக அசெம்பிளி லைனில் தயாரிக்கப்பட உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *