உற்பத்தியை எட்டிய மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட் அறிமுக விபரம்
இறுதி கட்ட சோதனை ஓட்டத்தை எட்டிய எக்ஸ்யூவி300 மாடலின் உற்பத்தியை மஹிந்திரா துவங்க உள்ளதால் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இன்டிரியரில் உள்ள வசதிகள் பெரும்பாலும் எக்ஸ்யூவி 400 எலக்ட்ரிக்கில் உள்ளத்தை போன்றே உள்ளது.
110hp பவர் மற்றும் 131hp என இருவிதமான பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல், 117hp பவர், வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும். இதில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.
131hp பவரை வழங்குகின்ற 1.2 லிட்டர் TGDI என்ஜினில் ஏசியன் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் பெற உள்ளது.
சமீபத்தில் விற்பனைக்கு வந்த எக்ஸ்யூவி400 காரில் இடம்பெற்றிருக்கின்ற டேஸ்போர்டில் உள்ளதை போன்ற வசதிகளை புதிய எக்ஸ்யூவி 300 பெறுவது சோதனை ஓட்ட படங்கள் மூலம் தெளிவாகியுள்ளது. இரண்டு 10.25 அங்குல ஸ்கீரின் பெற்று ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றொன்று டிஜிட்டல் கிளஸ்ட்டராக அமைந்துள்ளது.
வெளிப்புற தோற்றத்தில் சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்ட மஹிந்திரா BE கான்செப்ட்டில் இருந்து பெறப்பட்ட முன்புற பம்பர் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய எல்இடி ஹெட்லைட் ஆகியவை சோதனை ஓட்டத்தில் உள்ள மாடல் மூலம் தெளிவாக தெரிகின்றது.