புதிய இன்டீரியருடன் ரூ.15.49 லட்சத்தில் அறிமுகமாகியுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி400 ப்ரோ! விவரம் இதோ

பிரபல உள்நாட்டு வாகான தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா இந்தியாவில் அதன் அப்டேட் செய்யப்பட்ட XUV400 காரான XUV400 Pro-வை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.15.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற துவக்க விலையில் மஹிந்திரா நிறுவனம் தனது XUV400 Pro-வை பல புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அப்டேட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி-யின் புக்கிங் ரூ.21,000 என்ற டோக்கன் தொகைக்கு தொடங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் இந்த 2024 XUV400 Pro-வின் டெலிவரிகளை பிப்ரவரி 1, 2024 அன்று முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போதைய விலை அறிமுக விலை மற்றும் இது மே 31, 2024 வரை செய்யப்படும் டெலிவரிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

மஹிந்திராவின் 2024 XUV400 Pro காரின் வேரியன்ட்ஸ்கள் மற்றும் விலை விவரங்கள்:

மஹிந்திராவின் XUV400 Pro எலெக்ட்ரிக் காரானது 34.5kWh பேட்டரி, 3.3 kW AC சார்ஜர் கொண்ட EC Pro, 34.5 kWh பேட்டரி, 7.2 kW AC சார்ஜர் கொண்ட EL Pro மற்றும் 39.4 kWh பேட்டரி, 7.2 kW AC சார்ஜர் கொண்ட EL Pro என மூன்று வேரியன்ட்ஸ்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.15.49 லட்சம், ரூ.16.74 லட்சம் மற்றும் ரூ17.49 லட்சம் ஆகும்.

2024 மஹிந்திரா எக்ஸ்யூவி400 ப்ரோ காரின் கேபின் அம்சங்கள்:

மஹிந்திரா நிறுவனம் ரீடிசைன் செய்யப்பட்ட டேஷ்போர்டுடன் எக்ஸ்யூவி400 ப்ரோவை அறிமுகப்படுத்தி உள்ளது. இப்போது அப்டேட் செய்யப்பட்ட இந்த எக்ஸ்யூவி400 26.04 செமீ அளவிலான ஒரு புதிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை பெறுகிறது. மஹிந்திரா நிறுவனம் அதன் AdrenoX கனெக்டட் கார் டெக்னலாஜியை XUV400 Pro-வில் சேர்த்துள்ளது. இது 50-க்கும் மேற்பட்ட கனெக்டட் அம்சங்களுடன் வருகிறது.

தவிர XUV400 Pro வேரியன்ட்ஸ் கார்கள் டூயல்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்ஸ், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்ய ரியர் USB போர்ட் உள்ளிட்டவற்றுடன் வருகின்றன. இவற்றில் zகொடுக்கப்பட்டுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை சப்போர்ட் செய்கிறது. மேலும் இந்த கார் நெபுலா ப்ளூ என்ற புதிய எக்ஸ்டீரியர் கலர் ஆப்ஷனையும் பெறுகிறது.

shark-fin ஆன்டெனா ஆப்ஷனை இந்த கார்களில் நிறுவனம் கொடுத்துள்ளது. மேலும் இதன் இன்டீரியர் லைட் கிரே மற்றும் கருப்பு நிறத்தில் டூயல் டோனில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சுவிட்ச் கியரும் திருத்தப்பட்டுள்ளது. XUV400-வில் புதிய பிளாக்-பீஜ் டூயல்-டோன் தீம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் ஸ்டியரிங்கும் புதியது, இது ஒரு ஃபிளாட்-பாட்டம் டிசைன் மற்றும் காப்பர் நூல்களுடன் கூடிய லெதர் ஸ்டிச்சிங்குடன் வருகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *