ரூ.8.5 லட்சம் விலையில் மஹிந்தராவின் Bolero MaXX Pik-Up புதிய மாடல் இந்தியாவில் அறிமுகம்!

இந்தியாவின் முன்னனி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான மஹிந்தரா, தனிநபர்களுக்கான கார்கள் தவிர விவசாயம் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கு உதவும் வாகனங்களையும் தயாரித்து வருகிறது என்பது அனைவருமே அறிந்த விஷயம். அதில் ஒன்றுதான் Bolero MaXX Pik-Up வாகனம். இதன் புதிய மாடலை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது மஹிந்தரா. வர்த்தக பயன்பாட்டிற்கு உபயோகமாக இருக்கும் இந்த வாகனத்தை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ள மஹிந்தரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப் மையங்களை தொடர்பு கொள்ளலாம்.

புதிய மாடலில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் :

Bolero MaXX Pik-Up புதிய மாடலில் வாகனத்தின் கட்டுமான தரம், பாதுகாப்பு அம்சங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்தில் உள்ள வசதிகளை சொல்லிக் கொண்ட போகலாம். அந்தளவிற்கு ஏகப்பட்ட வசதிகள் உள்ளதால் வர்த்தகத்திற்கு பயன்படும் சிறப்பான வாகனமாக இது நிச்சியம் இருக்கும். மேம்படுத்தப்பட்ட ஏசி சிஸ்டம் உள்ளதால், பயணத்தின் போது ஓட்டுனருக்கு ஏற்படும் சிரமங்கள் குறைவதோடு புதிய அனுபவமும் கிடைக்கிறது.

எடை தாங்கும் திறன் :

இந்தப் பிரிவு வாகனத்திலேயே Bolero MaXX Pik-Up தான் மிகவும் பாதுகாப்பு நிறைந்த வாகனம் என்று தாராளமாக கூறலாம். ஆக்ரோஷமான ஆக்ஸிலிரேஷன் எச்சரிக்கை, எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம், வளைவில் சாதூர்யமாக திரும்புவது என இந்த வாகனத்தில் உள்ள சிறப்பம்சங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஒட்டுமொத்தமாக இந்த வாகனம் 1.3 டன் முதல் 2 டன் வரை எடை தாங்கும். இதன் கார்கோவின் நீளம் 3050mm ஆகும்.

இஞ்சின் பவர் :

டீசல் மற்றும் சிஎன்ஜி (CNG) ஆப்ஷனில் வரும் மஹிந்தரா Bolero MaXX Pik-Up வாகனத்தின் இஞ்சின் பவர் அதிகபட்சமாக 70 bhp பவர் மற்றும் 200Nm இழுவிசை முதல் 79 bhp பவர் மற்றும் 220Nm இழுவிசையை கொண்டுள்ளது.

நிறுவனத்தின் அதிகாரிகள் இந்த வாகனம் குறித்து என்ன கூறுகிறார்கள்?

மஹிந்தரா நிறுவனத்தின் உயர் அதிகாரி நளினிகாந்த் கோலகுண்டா கூறுகையில், தனித்துவமான பெர்ஃபார்மன்ஸ் மற்றும் பல வகை உபயோகத்திற்கும் பயன்படுத்தப்படும் வாகனம் எனப் பெயர் பெற்றுள்ள Bolero MaXX Pik-Up, எங்கள் மதிப்புவாய்ந்த வாடிக்கையாளர்கள் மத்தியில் நற்பெயரை சம்பாதித்துள்ளது. நல்ல கனமான வாகன கட்டுமானம், அதிகப்படியான எடை தாங்கும் திறன், எந்த வாகனமும் தராத நம்பகத்தன்மை போன்றவை காரணமாக வியாபாரிகள், தொழில் முனைவோர்களுக்கு மட்டுமின்றி தனிநபர்களுக்கும் நம்பிக்கையான தோழனாக இருக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதை உறுதி செய்யும் விதமாக, அவர்களின் வசதி மற்றும் சௌகர்யத்தை அதிகப்படுத்த புதிதாக அறிமுகபடுத்தியுள்ள மாடலில் ஏசி சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *