மஹிந்திராவின் புது எலக்ட்ரிக் கார்!! டெஸ்லா கார் எல்லாம் இதன்முன் தோற்றுப் போகும்… பயங்கர ஸ்டைலாக இருக்கிறது

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் காரான பிஇ.05 இவி (BE.05 EV) அதன் அறிமுகத்திற்கு முன்னதாக பொது சாலையில் ஓட்டி சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியாகி உள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் தீவிரமாக இருக்கும் நிறுவனங்களுள் ஒன்று மஹிந்திரா ஆகும். ஏற்கனவே, எக்ஸ்யூவி400 என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து விற்பனை செய்துவரும் இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக பல்வேறு புதிய எலக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன. அவை என்னென்ன என்பதை 2022ஆம் ஆண்டிலேயே மஹிந்திரா நிறுவனம் வெளிப்படையாக அறிவித்துவிட்டது.

இந்த வரிசையில், மஹிந்திரா பிஇ.05 எலக்ட்ரிக் கார் அடுத்த 2025ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் தற்போது, பிஇ.05 எலக்ட்ரிக் கார் சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்ட மஹிந்திரா பிஇ.05 எலக்ட்ரிக் காரின் படங்கள் அபினவ் ஆரோரா என்பவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த சோதனை ஓட்டத்தில், கார் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருப்பினும், காரின் வெளிப்பக்க ரியர்வியூ விங் மிரர்களையும், வைபர்களையும் காண முடிகிறது. இதில் இருந்து, பிஇ.05 எலக்ட்ரிக் காரின் வடிவத்தை மஹிந்திரா இறுதிச் செய்துள்ளதை அறிய முடிகிறது. இருப்பினும், காரின் ஹெட்லைட்கள் தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்களில் மறைக்கப்பட்டு உள்ளதை காணலாம்.

மஹிந்திராவின் பிஇ என்ற சப்-பிராண்டில் இருந்து வெளிவரவுள்ள பிஇ.05 எலக்ட்ரிக் காரானது கூபே வடிவில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. விற்பனையில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் இருந்து பறித்து இழுக்கக்கூடிய கதவு கைப்பிடிகள் இந்த எலக்ட்ரிக் காருக்கு வழங்கப்பட்டு உள்ளன. பின்பக்க கதவு கைப்பிடிகள் காரின் C-பில்லர்களில் வழங்கப்பட்டுள்ளன.

காரின் பின்பக்கத்தில், ஸ்பாய்லரை காண முடிகிறது. இது காரின் ட்ராகை குறைத்து, செயல்படுதிறனை அதிகரிக்கும். அத்துடன், பனோராமிக் சன்ரூஃப்-ஐயும் இந்த எலக்ட்ரிக் காரில் மஹிந்திரா வழங்கும் என எதிர்பார்க்கிறோம். இங்லோ பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு, பிஇ.05 எலக்ட்ரிக் கார் உருவாக்கப்படுகிறது. இதே பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டே எதிர்காலத்தில் மற்ற எலக்ட்ரிக் கார்களையும் உருவாக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

மஹிந்திரா பிஇ.05 எலக்ட்ரிக் காரின் நீளம் 4,370மிமீ, அகலம் 1,900மிமீ மற்றும் உயரம் 1,635மிமீ ஆகும். காரின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2,775மிமீ ஆக உள்ளது. இங்லோ பிளாட்ஃபாரத்தில் கார்களை அதிகப்பட்சமாக 5 மீட்டர்கள் நீளம் வரையில் கூட உருவாக்க முடியும். ஃப்யுல் என்ஜின் கிடையாது என்பதால், சக்கரங்கள் நன்கு முன்னோக்கியும், பின்னோக்கியும் தள்ளப்பட்டுள்ளன.

காரின் ஃப்ளோர்போர்டில் பேட்டரி பேக் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பேட்டரி பேக் நன்கு தட்டையானதாக வழங்கப்படுவதால், காரின் பின் இருக்கை வரிசையில் 3 பயணிகள் நன்கு சவுகரியமாக அமர்ந்து பயணிக்கலாம். மற்றப்படி, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை ஓட்டத்தில் இருந்து மஹிந்திரா பிஇ.05 எலக்ட்ரிக் காரின் உட்பக்க கேபின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *