மஹிந்திராவின் புதிய தார் எர்த் எடிஷன்; சிறப்புகள் என்னென்ன?
மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் Thar-ன் எர்த் எடிஷனை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.15.40 லட்சமாகும். எர்த் எடிஷனின் டீசல் வேரியண்ட் விலை ரூ.17.60 லட்சமாகும். சிறப்பு எடிஷனாக கொண்டு வரப்பட்டுள்ள இந்தக் கார் ஹார்ட் டாப் LX 4×4 வேரியண்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதோடு SUV ஆர்வலர்கள் விரும்பும் வகையில் ஸ்டைலாகவும் கம்பீரமாகவும் உள்ளது.
மஹிந்திரா தார் எர்த் எடிஷன் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்:
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எர்த் எடிஷன் Desert Fury வண்ணத்தில் டிரெண்டிங்கான மேட் சேடின் ஃபினிஷோடு வருகிறது. இதனால் பார்ப்பதற்கு ஒரு கம்பீரமான தோற்றம் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி வாகனத்தின் ஓரங்களில் பாலைவன மணல் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது கூடுதல் அழகை தருகிறது. அலாய் வீல்களில் தார் இலட்சினை கம்பீரமாக காட்சியளிக்கிறது. எர்த் எடிஷனின் கேபினுக்குள் உள்ள சிறப்பம்சங்களை இப்போது பார்ப்போம். இந்த எடிஷனுக்கென்றே பிரத்யேகமாக பல வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. டாஷ்போர்டில் அலங்காரமிக்க VIN பிளேட், லெதர் இருக்கைகள், டூன் வடிவமைப்பில் அமைக்கப்பட்ட ஹெட்ரெஸ்ட், பழுப்பு நிறத்திலான தையல், டூயல்டோன் ஏசி என இதிலுள்ள வசதிகளை சொல்லிக் கொண்ட போகலாம்.
மெல்லிய பியானோ பிளாக் நிறத்தில் HVAC பொறுத்தப்பட்டுள்ளது. ஸ்ட்ரீங் வீலில் இருண்ட க்ரோம் ஃபினிஷுடன் ட்வின் பீக் லோகோ உள்ளது. அதுமட்டுமா, கியர் லிவர் கூட அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக டார்க் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. உங்களுக்கு வேண்டும் வகையில் இந்த வாகனத்தை நீங்கள் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இதற்காக கூடுதலாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆர்ம்ரெஸ்ட்கள் முன்பக்கம் மற்றும் பின்பக்க இருக்கைகளுக்கு தரப்படுகிறது. அதுமட்டுமின்றி 7D தரை விரிப்புகள், கம்ஃபோர்ட் கிட் போன்றவையும் மஹிந்தரா நிறுவனத்தால் தரப்படுகிறது. இதை வைத்து உங்களுக்கு பிடித்தமான வகையில் Thar எர்த் எடிஷனை மாற்றிக்கொள்ள முடியும். இறுதியாக இதன் சக்திவாய்ந்த இஞ்சின் ஆப்ஷனைப் பற்றி பார்க்கப் போகிறோம்.
2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இஞ்சின் என இரண்டு ஆப்ஷன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. மேலும் உங்கள் வசதிக்கேற்ப 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6-ஸ்பீடு ஆக்டோமெட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு ஆப்ஷன் உள்ளது. நிச்சயம் இது பலவிதமான உபயோகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
கண்ணைக் கவரும் வடிவமைப்பு மற்றும் ரூ.15.40 லட்சம் என்ற குறைவான ஆரம்ப விலை போன்றவை Thar எர்த் எடிஷனை நோக்கி வாடிக்கையாளர்களை நிச்சயம் ஈர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.