மாருதி எலெக்ட்ரிக் கார் குறித்த முக்கிய அப்டேட் வெளியானது! குஷியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!

மாருதி நிறுவனம் இந்த ஆண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்திய பின்பு அதை ஏற்றுமதி செய்ய துவங்கும் என அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் இந்த ஆண்டு ரூ 250 கோடி மதிப்பிலான லித்தியம் அயான் பேட்டரிகளையும் ஏற்றுமதி செய்யப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
குஜராத்தில் நடந்து வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மாநிலத்தில் மாருதி நிறுவனம் செய்ய போகும் முதலீடு குறித்த அறிவிப்புகள் எல்லாம் வெளியிட்டது. அப்பொழுது மாருதி நிறுவனத்திலிருந்து பல்வேறு மூத்த அதிகாரிகள் வந்து அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களது அடுத்த கட்ட திட்டங்கள் மற்றும் குறிப்பிட்ட முதலீடுகளை எப்படி எல்லாம் செலவு செய்யப் போகிறார்கள் என்ற விரிவான விளக்கங்களை எல்லாம் அளித்தார்கள்.
அதில் பேசிய மாருதி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஒரு புதிய தகவல் ஒன்றை நமக்கு தெரிவித்துள்ளார். அதன்படி மாருதி நிறுவனம் இந்த ஆண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்த வாகனங்கள் அறிமுகமானவுடன் எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது பலரை ஆச்சரியப்படுத்தவும் சந்தோஷப்படுத்தவும் கூடிய ஒரு செய்தியாக இருக்கிறது.
மாருதி நிறுவனம் முதல் எலெக்ட்ரிக் காராக இவிஎக்ஸ் என்ற எலெக்ட்ரிக் காரை வெளியிடப் போவது நமக்கு எல்லாம் தெரிந்த விஷயம் தான். கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியிலேயே இது குறித்த தகவல்கள் எல்லாம் வெளியானது. ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காரின் கான்செப்ட் மாடலை மாருதி நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இந்த கார் 2024-ம் ஆண்டு இறுதி அல்லது 2025-ம் ஆண்டு தான் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வரும் என பலரும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் மாருதி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த மாநாட்டில் இந்த ஆண்டு இந்த கால அறிமுகப்படுத்தப்பட்டு ஏற்றுமதிக்கும் தயார் செய்யப்படும் என கூறியுள்ளது பலரை மகிழ்ச்சியை ஆக்கியுள்ளது.
இது மட்டுமல்லாமல் மாருதி நிறுவனம் இந்தியாவில் லித்தியம் அயான் பேட்டரிகளை தயாரித்து அதை ஏற்றுமதி செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக குஜராத் மாநிலம் அன்சால்பூரில் தோஷிபா கார்ப்பரேஷன் டென்சோ கார்ப்பரேஷன் மற்றும் சுஸூகி மோட்டார் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து லித்தியம் அயான் பேட்டரி தயாரிப்பை உருவாக்குகின்றன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் லித்தியம் அயான் பேட்டரிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாருதி நிறுவனம் குஜராத்தில் தனது இரண்டாவது ஆலையை அமைக்க சுமார் ரூ 32,200 கோடி ரூபாயை முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இதை வைத்து இரண்டாவது ஆலையையும் நான்காவது தயாரிப்பு லைனையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம் அமைக்கப்போகும் இரண்டாவது ஆலை ஆண்டிற்கு ரூ10லட்சம் கார்களை தயாரிக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. மேலும் முதல் ஆலையத்தில் உள்ள நான்காவது லைன் மட்டும் ஆண்டிற்கு 2.5லட்சம் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட உள்ளது. என் மூலம் மாருதி நிறுவனத்தின் தயாரிப்பு கொள்ளளவு என்பது அடுத்த சில ஆண்டுகளில் அதிகரித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாருதி கார்களின் விற்பனை மிக வேகமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மாருதி நிறுவனம் தயாரிக்கும் புதிய எலெக்ட்ரிக் காரையும் கூட்டு நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படும் பேட்டரி மற்றும் அதன் மாடல்களையும் இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் ஐரோப்பா ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. இதனால் மாருதி நிறுவனம் அடுத்த ஓர் ஆண்டிற்குள் தனது ஏற்றுமதி திறனை அதிகரித்து அதிக அளவிலான ஏற்றுமதியை செய்யும் என எதிர்பார்க்கலாம். இதனால் மாருதி நிறுவனத்தின் வருமானமும் அதிகமாக வாய்ப்பு உள்ளது.