மாலை 6.30க்கு மகரஜோதி தரிசனம்… சபரிமலையில் சரணகோஷத்துடன் காத்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள்… !
உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம். இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கடந்த 3 நாட்களாகவே கூடாரம் அமைத்து அப்பகுதியில் தங்கியுள்ளனர்.
இதற்காக தேவசம்போர்டு 10 இடங்களில் பக்தர்களுக்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இன்று மகர சங்கரமம் அதிகாலை 2 மணி 5 நிமிடங்களுக்கு தொடங்கியது. அந்த நேரம் சபரிமலை நடைதிறக்கப்பட்டு அதிகாலை 2 மணி 46 மணிக்கு மூலஸ்தானத்தில் மகர சங்கரம பூஜை நடத்தப்பட்டது. இதற்காக பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டுவரப்பட்ட நெய்யால் அபிஷேகம் நடைபெற்றதுஅதே நேரத்தில் பந்தளம் அரண்மனையில் இருந்து ஜனவரி 13ம் தேதி காலை தங்க ஆபரண பெட்டி எடுத்துவரப்பட்டது.
இன்று காலை இந்த ஆபரணப்பெட்டி நிலக்கல்லை வந்ததடைந்தது. தங்க ஆபரண பெட்டி மாலை 5 மணிக்கு சபரிமலை மரக்கூட்டம் பகுதிக்கு கொண்டுவரப்பட உள்ளது. அங்கிருந்து தேவசம்போர்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். 18ம் படிக்கு 6.30மணிக்கு தங்க ஆபரண பெட்டியானது, மேல் சாந்தி மற்றும் தந்திரியால் பெற்றுக் கொள்ளப்படும். திரு நடையில், உள்ள ஐயப்பனுக்கு இந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இதைத்தொடர்ந்து ஆறு மணி முதல் 6 45 மணிக்குள் பொன்னம்பலம் மேட்டில் மகர ஜோதி தரிசனம் நடைபெறும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.அந்த சமயத்தில் பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். இதனை கண்டவுடன் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் விண்ணதிர சரண கோஷம் எழுப்புவார்கள்.மகர ஜோதி நாளில் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேவசம்போர்டு செய்துள்ளது. இதற்காக முன்பதிவு முறையில் குறைந்த பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயத்தில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்இது குறித்து சபரிமலை தேவசம்போர்டு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ” மகர ஜோதியை காண வசதியாக பக்தர்களுக்கு சபரிமலையில் 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. மகரவிளக்கு தினத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஜோதியை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு மகரவிளக்கு தினத்தில் அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்க தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.