நாளை சபரிமலையில் மகரஜோதி தரிசனம்..!

பரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை காலமான தற்போது தினமும் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதன் சிகர நிகழ்ச்சியாக நாளை (திங்கட்கிழமை) மகரஜோதி தரிசனம் நடக்கிறது.

இதற்கிடையே அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர் குழுக்கள் சார்பில் சிறப்பு வாய்ந்த பாரம்பரிய பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எருமேலியில் நேற்று முன்தினம் நடந்தது. பக்தர்கள் தங்கள் முகம், உடல் மீது வண்ண, வண்ண பொடிகளை பூசி, கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக் கொண்டு இலை தழைகளை கையில் ஏந்தியவாறு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

அதை தொடர்ந்து எருமேலி கொச்சம் பலத்தில் இருந்து வாவர் மசூதியை சுற்றி நெற்றிப்பட்டம் சூட்டிய யானையில், அம்பலப்புழை கிருஷ்ணசாமி கோவிலில் இருந்து பூஜித்து எடுத்து வரப்பட்ட ஐயப்ப விக்ரகத்தை சுமந்து வந்து காணிக்கை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து வலியம்பலமான தர்ம சாஸ்தா கோவிலில் சாமி தரிசனம் செய்ததும் பக்தர் குழுவினர் சபரிமலைக்கு புனித பயணம் புறப்பட்டனர்.

அதை தொடர்ந்து நேற்று திருவாபரண ஊர்வலம்இதற்கிடையே பந்தளத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு திருவாபரண ஊர்வலம் சபரிமலை நோக்கி புறப்பட்டது. இந்த திருவாபரணம் நாளை மாலையில் மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

அதனை தொடர்ந்து சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தருவார். மகரவிளக்கு தினத்தன்று காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் பம்பையில் இருந்து மலையேறி சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மகரவிளக்கு பூஜை நாளில் 40 ஆயிரம் பக்தர்கள், முந்தைய நாளில் 50 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *