மோசமான கருவளையத்தை விரட்ட வீட்டிலேயே செய்யலாம் நைட் கிரீம்! தெரிஞ்சுக்கோங்க
பார்ப்பதற்கு நமது அழகை எடுத்து காட்டுவது முதலில் நம் கண்கள் தான். நாம் தினமும் கண்களை பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.
அந்த வகையில் எல்லோருக்கும் கண்களை சுற்றி கரு வளையங்கள் வருவதற்கான காரணம் சரியான நேரத்தில் உறங்காமல் கணினி மற்றும் கைபேசியில் நமது நேரத்தைக் கழித்தால் இதனால் கண்ணுக்கு கீழ் கருவளையம் கண்டிப்பாக ஏற்படுகின்றது.
இந்த கருவளைய பிரச்சனையில் இருந்து விடுபட நாம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு நைட் கிரீம் தயாரிக்கலாம்.
எப்படி கருவளையத்திற்கான நைட் கிரிம் தயாரிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
செய்யும் முறை
முதலில் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து அதன் தோலை சீவி மிகவும் சிறியதாக துருவி கொள்ள வேண்டும்.
பின்னர் துருவிய உருளை கிழங்கை வடிகட்டி அதன் சாற்றை தனியே வடித்து எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த சாறுடன் பாதாம் பொடி மற்றும் கற்றாளை ஜெல் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கருவளையத்தை போக்கும் நைட் கிரீம் தயாராகிவிடும்.
பயன்படுத்தும் முறை
தினமும் இரவில் நித்திரைக்கு செல்வதற்கு முன்பு முகத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
பின்னர் தயார் செய்து வைத்துள்ள நைட்கிரீமை கண்களுக்கு கீழ் தடவி இரவு முழுவதும் அப்படியே விட வேண்டும்.
மறுநாள் காலையில் முகத்தை ஃபேஸ் வாஷ் அல்லது சோப்பை கொண்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர கண்களில் உள்ள கருவளையம் காணாமல் போய் விடும்.