கோதுமை மாவு வைத்து இப்படி செய்யுங்க: சூப்பரான காலை உணவு
கோதுமை மாவு, வெங்காயம் இருந்தால் போதும். ஒரு முறை இப்படி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
1 கப் கோதுமை மாவு
3 ஸ்பூன் எண்ணெய்
1 ஸ்பூன் சீரகம்
4 பச்சை
அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
1 ஸ்பூன் மிளகாய் பொடி
2 ஸ்பூன் மல்லிப் பொடி
உப்பு
கருவேப்பிலை நறுக்கிறது
செய்முறை: எண்ணெய் சேர்த்துகொள்ளவும். தொடர்ந்து சீரகம் , பச்சை மிளகாய் சேர்க்கவும். இஞ்சு- பூண்டு பேஸ்ட் சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து வெங்காயத்தை சேர்க்கவும். தொடர்ந்து மஞ்சள் பொடி, மல்லி தூள், மிளகாய் பொடி சேர்த்து கொள்ளவும். நன்றாக கிளரவும். உப்பு சேர்த்து கிளரவும். கோதுமை மாவை தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளவும். மாவை சிறிய வட்டமாக இட வேண்டும். தொடர்ந்து வெங்காயக் கலவையை அதனுள் வைத்துகொள்ளவும். வட்டமாக மாற்றவும். இதை இட்லி தட்டில் வைத்து அவித்து எடுக்கவும்.