உருளைக்கிழங்கு வைத்து சூப்பர் மசாலா செய்யுங்க: ஈசி ரெசிபி
செம்ம சுவையாக உருளைக்கிழங்கு ரெசிபி. ஒரு முறை இப்படி செய்யுங்க.
அரை கிலோ உருளைக்கிழங்கு
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
உப்பு தேவையான அளவு
தண்ணீர்
2 ஸ்பூன் எண்ணெய்
கடுகு 1 ஸ்பூன்
சீரகம் அரை ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
1 வெங்காயம் நறுக்கியது
1 கொத்து கருவேப்பிலை
1ஸ்பூன் பூண்டு
1 ஸ்பூன் துருவிய இஞ்சி
4 பச்சை மிளகாய்
1 தக்களி நறுக்கியது
செய்முறை : முதலில் உருளைக்கிழங்கை அவித்து கொள்ளவும். தொடர்ந்து தோலை நீக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மசித்து, மஞ்சள் பொடி, உப்பு, தண்ணீர் சேர்த்து கிளரவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்க்கவும். தொடர்ந்து இஞ்சி பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து கிளரவும். வெங்காயாம் நன்றாக வதங்கியதும். அவித்த உருளக்கிழங்கு கலவையை சேர்க்கவும். தொடர்ந்து பச்சை மிளகாய், தக்காளி, நறுக்கியது சேர்த்து கிளரவும்.