இந்தியாவுடனான முக்கிய ஒப்பந்தத்தை புறக்கணித்த மாலைதீவு
இந்திய – மாலைதீவு உறவில் விரிசலானது நீடித்துவரும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான முக்கிய ஒப்பந்தத்தை புதுப்பிக்க அந்நாட்டு ஜனாதிபதி முகமது முய்ஸூ பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
நாட்டின் நீர் நிலைகள் குறித்த தகவல்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார் .
கடந்த 2019ஆம் ஆண்டு நரேந்திர மோடியினால் “ஹைட்ரோகிராஃபிக் சர்வே” எனும் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
முகமது முய்ஸூவின் அறிவிப்பு
இந்த ஒப்பந்தத்தின்படி மாலைதீவில் உள்ள நீர்நிலைகள், பாறைகள், கடற்கரையோரங்கள், கடல் நீரோட்டங்கள் மற்றும் அலை அளவுகள் ஆகியவற்றைப் பற்றிய விரிவான ஆய்வு நடத்த இந்தியாவுக்கு அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் 2019ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்.
எனினும், 2024ம் ஆண்டுடன் ஒப்பந்தம் நிறைவடைய உள்ள நிலையில், இதனை புதுப்பிக்கப்போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் முய்ஸூ அறிவித்துள்ளார்.