சென்னை மக்களை வியப்பில் ஆழ்த்த வரும் Mall of Madras.. 12 லட்சம் சதுரடி மெகா மால்..!!

சென்னையில் விரைவில் திறக்கப்படவுள்ள “மால் ஆஃப் மெட்ராஸ்” இந்தியாவின் மிகப்பெரிய மொத்த மற்றும் சில்லறை சந்தையாக இருக்கப்போகிறது. இது ஒருங்கிணைந்த மொத்த மற்றும் சில்லறை வர்த்தக மையமாக உருவாகும் காரணத்தால் பல துறையை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் அங்கம் வகிக்க உள்ளது.
சௌகார்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் சூளைமேடு போன்ற சென்னையின் பாரம்பரிய வர்த்தக பகுதிகளில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இந்த Mall of Madras அமைந்துள்ளது.
சென்னையில் மிகப்பெரிய கலப்பு-பயன்பாட்டு வளர்ச்சி திட்டமான ஸ்பிரி சிட்டியின் மையப்பகுதியில் இது அமைந்துள்ளது இந்த மால் ஆப் மெட்ராஸ். மெட்ராஸ் என்பது எமேஷனலான சொல் என்பதால் இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வர்த்தக மையம் வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே ஒரு சிறந்த இணைப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த இந்திய மக்களும் வியப்படையும் வகையில் பல விஷயங்கள் இங்கு உள்ளது.
சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த மால் ஆப் மெட்ராஸ் சுமார் 12 லட்சம் சதுரடியில் கட்டுப்பட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் இந்த மால் கிட்டத்தட்ட 5 அடுக்குமாடிகளில் அமைந்துள்ளது. மேலும் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் மால்-ன் ஃப்ரடேஜ் மட்டுமே 700 மீட்டர் அளவில் உள்ளது.
மால் ஆப் மெட்ராஸ்-ல் சுமார் 300 கடைகள், 12 ஆங்கர் கடைகள் (முக்கியமான இடத்தில் பெரிய கடைகள்), 9 பிவிஆர் ஸ்கிரீன் தியேட்டர், 2 ஏக்கர் பரப்பளவில் பிராண்ட் மற்றும் மார்கெட்டிங் ப்ரோமோஷன் செய்யும் தளம், 30 உணவு வகைகளுக்கு (Cusines) பிரத்தியேக உணவகங்கள், புட் கோர்ட், 3 தளத்தில் சுமார் 1500 கார் பார்க் செய்யப்படும் அளவுக்கு பார்க்கிங் வசதி.
இந்த மாலில் லைப்ஸ்டைல், பேஷன், எலக்ட்ரானிக்ஸ், நகைகள், பொம்மைகள், ஆக்சசரீஸ், விளையாட்டு மற்றும் லெசூர், பழங்கால பொருட்கள், ஹைப்பர்மார்கெட், காஸ்மெட்டிக்ஸ், ஹோம் பர்னிஷிங் என பிரிவுகளில் கடை வர உள்ளது.
மால் ஆப் மெட்ராஸ் பொதுமக்கள் திறப்பிற்குப் பின்பு தினமும் குறைந்தது 40 லட்சம் பேர் வருவார்கள் என கணக்கிடப்பட்டு உள்ளது. இதேபோல் வட சென்னை பகுதியில் அமைய உள்ள மிகப்பெரிய மால் இது என்பது குறிப்பிடத்தக்கது, மொத்த மால் கட்டமைப்பும் ஒரு ஏர்போர்ட் ஸ்டைலில் அமைந்துள்ளது.