ஐக்கிய அரபு அமீரக ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படும் மருத்துவ காப்பீடு: முழுமையான தகவல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இனி மருத்துவ காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய இந்த திட்டம் பேருதவியாக
முதற்கட்டமாக துபாய் மற்றும் அபுதாபி மாகாணங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் மருத்துவ காப்பீடு உறுதி செய்யப்பட இருக்கிறார்கள். எதிர்வரும் 2025 ஜனவரி 1ம் திகதி முதல் குறித்த மருத்துவ காப்பீட்டு திட்டம் அமுலுக்கு வர உள்ளது.

பணிபுரியும் நிறுவனத்தால் மருத்துவ காப்பீட்டு உறுதி செய்யப்படாத ஊழியர்களுக்கு புதிய இந்த திட்டம் பேருதவியாக இருக்கும். துபாய் மாகாணத்தில் நிறுவனங்களே தங்கள் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, ஊழியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் இந்த திட்டத்தில் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அபுதாபியில் நிறுவன உரிமையாளர்களும் ஸ்பான்சர்களும் தங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விசா அனுமதிக்கப்பட்டாது
காப்பீட்டு தொகையானது நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் செலுத்த வேண்டும், ஊழியர்கள் செலுத்த தேவை இல்லை. ஆனால் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிறுவனம் பொறுப்பாகுமா என்பதில் விளக்கமளிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

மேலும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையாத ஊழியர்களுக்கு விசா அனுமதிக்கப்பட்டாது என்பதுடன், புதுப்பிக்கவும் அனுமதி மறுக்கப்படும் என்றே கூறப்படுகிறது.

புதிய காப்பீடு திட்டத்தால் என்ன பலன் என்பது குறித்து விரிவான தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனால் துபாய் மாகாணத்தில் மாதம் 4,000 திர்ஹாம் தொகைக்கு குறைவாக சம்பளம் வாங்கும் ஒருவருக்கு தற்போது அளிக்கப்பட்டுவரும் அனைத்து மருத்துவ சேவைகளும் இலவசமாக கிடைக்கும் என்றே நம்பப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *