ரோகித்துக்கு எதிராக பிசிசிஐயில் சூழ்ச்சி? வேண்டும் என்றே சிக்கலில் மாட்டிவிட முடிவு..தப்பிக்குமா தலை

IND vs ENG : இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆனால் இந்த போட்டி குறித்து வெளியாகும் செய்தி ஒன்றொன்றும் பீதியை ஏற்படுத்துகிறது. எப்படி வடிவேலு காமெடியில், எனக்கு எதிரி வேறு எங்குமே இல்லடா! இங்கேயே தான் இருக்கீங்க என்று ஒரு வசனம் வருமோ. அது ரோகித் சர்மாவுக்கு கச்சிதமாக பொருந்தும்.
இந்திய அணியில் ஏற்கனவே விராட் கோலி இல்லாத நிலையில் முதல் டெஸ்டில் அரை சதம் அடித்த கே எல் ராகுல் மற்றும் ஜடேஜா என இருவருமே காயம் காரணமாக அணியில் இல்லை. ஏற்கனவே சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி வீரர்கள் தடுமாறுகிறார்கள். ரோகித் சர்மா சொந்த மண்ணில் கடந்த நான்கு ஆண்டுகளில் 2 சதம் மட்டும் தான் அடித்திருக்கிறார்.
கில் மற்றும் ஸ்ரேயாஸ் சுழல் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறி வருகிறார்கள். இதனால் தான் கடைசி நிமிஷம் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இளம் வீரர்கள் மோசமாக விளையாடி வருவதால் அவர்களுடைய நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தை தயாரிக்க வேண்டும் என்று ரசிகர்களும் கிரிக்கெட் வல்லுனர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.