தேங்காய் போல் மாங்காய் சட்னி; இந்த புது ரெசிபியை கண்டிப்பா ட்ரை பண்ணுங்க
சுவையான, புது வகையான மாங்காய் சட்னி ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சை மாங்காய் – 1
வெங்காயம் – 1
துருவிய தேங்காய் – அரை கப்
வர மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
முதலில் மாங்காயை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். தோலுடன் செய்தாலும் நன்றாக இருக்கும். அடுத்து வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். இப்போது இந்த இரண்டு பொருட்களுடன் உப்பு, மிளகாய், தேங்காய் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும்.
இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் ஊற்ற காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த கலவையை சட்னியில் சேர்க்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான மாங்காய் சட்னி ரெடி. இதை இட்லி, தோசை, தயிர் சாதம், வெரைட்டி ரைஸ்-க்கு சைட் டிஷ்ஷாக வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.