ரோஜா படத்திற்கு பிறகு மதுவுக்கு வாய்ப்பு கொடுக்காத மணிரத்னம்! இது தான் பிரச்சனையா?
நடிகை மது தமிழில் அழகன் பட மூலமாக அறிமுகம் ஆனவர். அவரது பெயரை மதுபாலா என மாற்றி வைத்தது இயக்குனர் கே.பாலசந்தர் தான்.
இருப்பினும் மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலமாக தான் மது புகழின் உச்சத்தை தொட்டார். 1992ல் வெளிவந்த அந்த படத்தின் மூலமாக தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.
வாய்ப்பு தராத மணிரத்னம்
ரோஜா படத்திற்கு பிறகு நடிகை மது இருவர் படத்தில் தோன்றி இருப்பார். அதன் பின் மணிரத்னம் அவருக்கு வேறு எந்த படத்திலும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அதற்கான காரணம் என்ன என சமீபத்திய பேட்டியில் மதுவிடம் கேட்கப்பட்டு இருக்கிறது.
“என்னுடைய தவறு தான். அதற்கு என்னுடைய attitude தான் காரணம். இயக்குனர் மணிரத்னம் ஒவ்வொரு ஆர்ட்டிஸ்ட் உடனும் ஒரு பிணைப்புடன் இருப்பார். அவருடன் நான் touchல் இல்லை, அதனால் தான் இருவர் படத்திற்கு பிறகு வேறு எந்த வாய்ப்பும் அவர் எனக்கு தரவில்லை” என மது தெரிவித்து இருக்கிறார். மேலும் தான் குடிபழக்கம் கொண்டிருந்ததையும் காரணமாக மது குறிப்பிட்டு இருக்கிறார்.