மனித குலம் இன்னும் தயாராகவில்லை… பேரழிவு உறுதி: எச்சரிக்கும் WHO மருத்துவர்கள்

பேரழிவைத் தரும் அடுத்த பெருந்தொற்றுக்கு மனித குலம் இன்னும் தயாராகவில்லை எனவும், இதனால் பேரிழப்பை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பின் முதன்மை மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பெருந்தொற்றுக்கு தயாராகவில்லை

மிக விரைவில் பூமியை Disease X தாக்கவிருக்கிறது என குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவரான Tedros Adhanom Ghebreyesus, மக்கள் தங்கள் உற்றார் உறவினர்களை இழக்க நேர்ந்த பெருந்தொற்றில் இருந்து சிறு அளவு கூட கற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராகவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், கொரோனா பெருந்தொற்றின் போது எதிர்கொண்ட சவால்களை நாம் மீண்டும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Disease X திடீரென்று வியாபிக்கலாம், அது நாளை வேண்டுமானால் இருக்கலாம் என குறிப்பிட்டுள்ள அவர், நாம் சிறிதளவேனும் தயாராக வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

20 மடங்கு மரணத்தை ஏற்படுத்தக் கூடிய
கொரோனா காலகட்டத்தில் நாம் எதிர்கொண்ட மோசமான சூழல்களை மீண்டும் நாம் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பெருந்தொற்றை விடவும் 20 மடங்கு மரணத்தை ஏற்படுத்தக் கூடிய கொடிய தொற்றாக Disease X இருக்கும் என்று நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால், இதன் பின்னர் மேலும் சில பெருந்தொற்றுகள் ஏற்படும் ஆபத்தும் இருப்பதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர். Disease X சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும், மொத்தமாக முடங்கும் பேராபயம் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றானது வெறும் எச்சரிக்கை மட்டுமே என பிரபல மருத்துவ நிபுணர் Steve Davies விடுத்த எச்சரிக்கையை எடுத்தே உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *