அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே!.. நடிகர்கள் – இயக்குனர்கள் நெகிழ்ச்சி
பொதுவாக மறைவு என்றாலே அது இருளில் தான் வரும். ஆனால் விடியலில் மறைந்தார் கேப்டன் விஜயகாந்த். நடிகர் சங்க பிரச்சனையானாலும், அதன் சார்பாக நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் அதை முனைப்புடன் நடத்தி வெற்றி கண்டவர். நடிகர் சங்கக் கடன் பிரச்சனையைத் தீர்த்து வைத்தவர் கேப்டன் தான். அந்த வானத்தைப் போல மனம் படைசச்ச மன்னவரே என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
அவரை இழந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் வாடி வருகின்றனர். அவரது ஆன்மா சாந்தி அடைய இரங்கல்களைப் பலரும் தெரிவித்து வரும் வேளையில், அவருடனான நினைவலைகளை மீட்டு எடுக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
ரசிகர்களை எந்த அளவு இவரை நேசிக்கிறார்களோ, அதை விட பல மடங்கு இவர் நேசிப்பார். என்னுடைய சூட்டிங்கலயே அவரோட அலுவலகத்தில் இருந்து வந்துருக்கு. என இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.
நம்மை விட்டு அவர் போனாலும் அவர் செய்த நல்ல காரியங்கள் இன்னும் இருக்கும் என இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். திரை உலகில் ஒரு மலை சாய்ந்தது. மக்கள் மனதில் செல்வாக்கு பெற்ற நடிகர் மறைந்துவிட்டார். 3, 4 படங்களில் தான் அவருடன் பழக்கம். அவர் இதயத்தால் பேசுபவர். நிறைய பேருக்கு உதவி செய்தாலும் விளம்பரம் தேடியதில்லை என நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நான் அதிகமாக பார்த்த படம் அவரோட அலை ஓசை. ஆத்திரத்தை அதிகமாகக் கண்களில் காட்டினார். நெருப்பு போன்ற உணர்வை கொண்டு வந்தார் என இயக்குனர் மாரிசெல்வராஜ் தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு விழா, நிகழ்ச்சி என்றாலும் அனைவரையும் காரில் ஏற்றி விட்டு கடைசியாக ஏறுபவர். அவர் ரியல் ஹீரோ. நடிகர்களுக்கு சின்ன பிரச்சனை என்றால் உடனே கேட்கக்கூடியவர் கேப்டன் தான் என்கிறார் நடிகர் வையாபுரி. மக்கள் மனதில் வாழும் சகாப்தம் விஜயகாந்த். ரியல் ஹீரோவும் அவர் தான் என்கிறார் நடிகர் சிம்பு.
நடிகர் யூகிசேது : எல்லோரையும் நேசிக்கக்கூடியவர். ரமணா படப்பிடிப்பின் போது முதல் 15 நாள் சூட்டிங்கில் ஏன்யா இந்தப் படத்துல நான் இருக்கேனா இல்லையா… யூகி சேது தானா என விஜயகாந்த் தமாஷாகக் கேட்டாராம். அந்தப்படத்தோட அழகான விஷயம் குற்றவாளியை நோக்கித் தான் நான் போவேன்.
ஆனா கடைசில தான் தெரியும் அவன் குற்றவாளி இல்ல. தலைவன்னு. ஆஹா அவர் தோற்கக்கூடாதேன்னு நினைப்பேன். இந்தப்படத்துல நான் நடிக்க வேண்டிய ரோல்ல முதல்ல மாதவன் தான் நடிப்பதாக இருந்தது. அதை அழகா இயக்குனர் முருகதாஸ் எடுத்து இருப்பார்.