உச்சி முதல் பாதம் வரை பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் நெல்லிக்காய்.!
தேவையான பொருட்கள்:-
பெரிய நெல்லிக்காய்
இஞ்சி
கறிவேப்பிலை
செய்முறை:-
நெல்லிக்காய், இஞ்சி, கறிவேப்பிலை உள்ளிட்ட மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து மோர் அல்லது தண்ணீரில் கலந்து வடிகட்டி தினமும் வெறும் வயிற்றில் குடித்துவர கபம், வாதம், பித்தம் உள்ளிட்டவை சமநிலைப்படும்.
இந்தக் குடிநீரைக் குடிப்பதால் தலைமுடி கொட்டுதல் மற்றும் நரைத்தல் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் கண்கள் மற்றும் பற்களில் பிரச்சினை வராமல் தடுக்கிறது. அதுமட்டுமில்லாமல் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
இந்தக் குடிநீரை நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து குடித்துவர படிப்படியாக சர்க்கரை அளவு குறைந்து வருவதை பார்க்கலாம். மேலும், இந்த குடிநீரை தொடர்ந்து குடித்து வரும்போது செரிமானப்பிரச்சினை, வயிற்றுவலி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படாது.