புற்றுநோய் முதல் பல மருத்துவ சிகிச்சைகளுக்கு வருமான வரி சலுகை.. பிரிவு 80DDB தெரியுமா உங்களுக்கு?!
உங்கள் குடும்பத்தினருக்கு புற்றுநோய் , நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவ சிகிச்சை செய்து வருகிறீர்கள் எனில் அதனை வருமான வரி கணக்கில் குறிப்பிட்டு வரிச் சலுகை பெற முடியும்.
இதற்கான வருமான வரி சட்டத்தின் பிரிவு 80DDB குறித்து இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்.
பிரிவு 80DDB: வருமான வரி செலுத்தும் நபர் தனக்கோ அல்லது சார்ந்தவர்களுக்கோ ஏற்பட்டுள்ள குறிப்பிட்ட தீவிர நோய்களுக்காக செய்யப்படும் மருத்துவ செலவுகளுக்கு வரி விலக்கு கோரலாம். வரி சலுகை கோரும் நபரின் வயது மற்றும் செய்யப்பட்ட செலவை பொறுத்து இது மாறுபடும். யாரெல்லாம் வரிச்சலுகை கோரலாம்?: வருமான வரி சட்டம் பிரிவு 80DDB கீழ் தனிநபர் அல்லது பிரிக்கப்படாத இந்து குடும்பத்தை சேர்ந்தவர் வரி சலுகையை பெறலாம். கூடுதலாக இந்த வரி சலுகையை பெற இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.நிபந்தனைகள் என்னென்ன?: வரி சலுகை கோருபவர் தன்னை சார்ந்திருப்பவருக்கு சிகிச்சை அளிக்க பணம் செலவு செய்திருந்தால்இங்கே சார்ந்திருப்பவர் என்பது மனைவி, குழந்தைகள், பெற்றோர் மற்றும் சகோதரன்/சகோதரி.ஒருவேளை சார்ந்திருக்கும் நபர், காப்பீடு மூலம் சிகிச்சைக்கான பணம் பெற்றிருந்தால், அதில் கிடைத்த தொகை போக மீதமுள்ள தொகைக்கு விலக்கு கோரலாம்.
பிரிவு 80DDBயில் வரிச்சலுகை கோர சான்றிதழ் பெறுவது எப்படி?: சிகிச்சை பெற்று வரும் உடல் பிரச்சனைக்கு ஏற்ப அதற்குரிய மருத்துவ நிபுணர்களிடம் சான்றிதழ் பெற வேண்டும். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர் என்றால் அரசு மருத்துவமனையில் சான்றிதழ் பெற வேண்டியதில்லை.அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர், இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட தகுதிவாய்ந்த முழு நேர சிறப்பு மருத்துவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
மருத்துவ காப்பீடு இருந்தால் ரூ.50,000 வரை வரிச் சலுகை? என்ன சொல்கிறது பிரிவு 80D?சான்றிதழில் கட்டாயம் இடம் பெற வேண்டியவை: நோயாளியின் பெயர், வயது, என்ன நோய் தாக்கம் அல்லது பாதிப்பு.சான்றளிக்கும் மருத்துவரின் நிபுணத்துவம் என்ன? பெயர் முகவரி, பதிவு எண்என்னென்ன பாதிப்புகளுக்கு வரி சலுகை பெறலாம்?நரம்பியல் பாதிப்பு, குறைபாட்டின் தன்மை 40% மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும்1. முதுமை மறதி (Dementia )2. டிஸ்டோனியா மஸ்குலோரம் டீஃபார்மன்ஸ் (Dystonia Musculorum Deformans )3. இயக்க நரம்பு நோய் (Motor Neuron Disease )4.