மார்ச் அமாவாசை 2024: பால்குண அமாவாசை எப்போது? சரியான தேதி, சிறப்பு பூஜை விரத முறை

அமாவாசை திதியின் அதிபதி, முன்னோர்களாக கருதப்படுகின்றனர். ஒரு வருடத்தில் மொத்தம் 12 அமாவாசைகள் வருகின்றன. இந்நாளில் புனித தளத்தில் உள்ள புண்ணிய நதியில் நீராடி, தான தர்மம், சடங்குகள் செய்வதன் மூலம் முன்னோர்கள் மற்றும் கடவுள்களின் ஆசியைப் பெறலாம். பித்ரா தோஷத்தில் இருந்து நிவாரணம் பெற அமாவாசை திதி சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு, வரும் பால்குன அமாவாசை மார்ச் 9 அல்லது 10 ஆம் தேதியா? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. அவர்களின் சந்தேகத்தை போக்கும் வகையில் பால்குன் அமாவாசை எப்போது? சரியான தேதி, விரதம், பூஜை முறைகள் மற்றும் தானம் செய்வதற்கான நல்ல நேரம் குறித்து பார்க்கலாம்.

பால்குண அமாவாசை எப்போது?

பஞ்சாங்கத்தின்படி, பால்குன அமாவாசை மார்ச் 9, 2024 அன்று தொடங்குகிறது. மார்ச் 9 ஆம் தேதி மாலை 06.17 மணிக்கு அமாவாசை தொடங்கி மறுநாள் 10 மார்ச் 2024 அன்று மதியம் 02.29 மணிக்கு முடிவடையும். சாஸ்திரங்களில், உதய திதியின்படி பார்க்கும்போது இந்த அமாவாசை மார்ச் 10 அன்று இருக்கும்.

அமாவாசை முகூர்த்த நேரம் (மார்ச் 10)

அதிகாலை காலை 04.49 – காலை 05.48 நீராட வேண்டும். மதியம் மதியம் 12.08 – மதியம் 01.55 மணி வரை நீராடலாம்.

பால்குண அமாவாசை பூஜை முறை

முன்னோர்களை வழிபடுவதற்கு பால்குன் அமாவாசை அன்று தேவைப்படும் பொருட்கள், தண்ணீர், சம்பா, ஜூஹி அல்லது மால்தி பூ போன்ற வெள்ளை பூக்கள், கருப்பு எள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனை எடுத்து முன்னோர்களுக்கு நீர் கொடுக்கவும். அதாவது, உள்ளங்கையில் தண்ணீரை எடுத்து கட்டைவிரல் வழியே தண்ணீர் கொடுக்க வேண்டும். புராண நூல்களின்படி, உள்ளங்கையின் கட்டைவிரல் இருக்கும் பகுதி பித்ரா தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. காலை 11:30 முதல் 12:30 வரை தர்ப்பணம் செய்ய சிறந்த நேரம். இது முன்னோர்களின் ஆன்மாவை திருப்திப்படுத்துவதாகவும், அவர்கள் தங்கள் சந்ததியினருக்கு செழிப்புடன் ஆசீர்வதிப்பதாகவும் நம்பப்படுகிறது.

பொருளாதார நெருக்கடிகள் நீங்க

பால்குன் அமாவாசை அன்று இரவில், ஓடும் ஆற்றில் 5 சிவப்பு மலர்கள் மற்றும் 5 விளக்குகள் தீபம் ஏற்றி நீரில் விடவேண்டும். இந்த வழிபாட்டு முறை நிதி சார்ந்த நன்மைகளை வழங்கும். பொருளாதார நெருக்கடி நீங்கும். வெற்றிக்கான பாதைகள் திறந்திருக்கும். தானம் செய்வது மகிழ்ச்சியைத் தரும். நலிவடைந்தவர்களுக்கு உணவு தானம் செய்யுங்கள். இல்லாதோருக்கு பண உதவி செய்வதும் சிறப்பு வாய்ந்தது. இதனால் காலசர்ப் மற்றும் பித்ரா தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *