திருமணமான பெண்கள் கூகுளில் அதிகமாக தேடுவது இதை தானாம்… என்னனு தெரியுமா?

பொதுவாக பெண்களுக்கு எத்தனை உறவுகள் இருந்தாலும் திருமணத்திற்கு பின்னரான வாழ்க்கையில் கணவர் தான் முக்கியம் என்று ஆகிவிடுகின்றது.

கூகுளில் மக்கள் பல வகையான விஷயங்களைத் தேடுகிறார்கள். ஆனால் திருமணமான பெண் உண்மையில் எதைத் தேடுகிறாள் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில், எந்தக் கேள்விக்கும் விடை காண வேண்டுமானால், கூகுளை விட சிறந்தது எதுவுமில்லை.

நமது கடினமான மற்றும் விசித்திரமான கேள்விகள் அனைத்திற்கும் இது பதில்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், கடந்த சில ஆண்டுகளில் இது நமது தேவைகளின் ஒரு பகுதியாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில் திருமணமான பெண்கள் கூகுளில் என்ன தேடுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், திருமணத்திற்குப் பிறகு பெண்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் கூகுளின் உதவியைப் பெறுகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.

அது என்னெவென்று தெரிந்தால் பெரும்பாலான ஆண்களும் ஆச்சரியப்படுவார்கள்.திருமணமான பெண்கள் அப்படி என்ன கூகுளில் தேடுகிறார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்கக்கலாம்.

அதிகமாக தேடுவது என்ன?
கூகுள் தரவுகளின்படி, பெரும்பாலான திருமணமான பெண்கள் தங்கள் கணவர் தொடர்பான பல விஷயங்களைத் தேடுகிறார்கள். பெண்கள் தங்கள் கணவரின் விருப்பு வெறுப்புகள் குறித்து கூகுளில் அதிகமாக தேடுகிறார்களாம்.

திருமணத்திற்குப் பிறகு, உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் தனது கணவருக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்ற கேள்வியால் குழப்பமடைகிறார்கள். உண்மையில் சில பெண்கள் தங்கள் கணவனை அடிமையாக்குவதற்கான வழிகளை அறிய விரும்புகிறார்கள்.

சில பெண்கள் இதுபோன்ற கேள்விகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதுமட்டுமின்றி, திருமணத்திற்குப் பிறகு, பெண்கள் தங்கள் கணவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கவலைப்படுகிறார்கள்.எனவே இது தொடர்பாகவே அதிகமாக தேடுகின்றார்கள் என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *