7 பேர் போற மாருதி கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே ஷோரூம்ல இருப்பீங்க!
இந்திய சந்தையில் 7 சீட்டர் கார்களுக்கு (7 Seater Cars), வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. நிறைய பேர் பயணம் செய்ய முடியும் என்பதுதான் இதற்கு காரணம். இந்த சூழலில், கடந்த ஜனவரி மாதம் அதிகமாக விற்பனையான டாப்-10 7 சீட்டர் கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
இதில், மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 9,750 எர்டிகா கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.
ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 14,632 ஆக உயர்ந்துள்ளது. இது 50 சதவீத வளர்ச்சி ஆகும். இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான ஒரு வளர்ச்சி என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை. மாருதி சுஸுகி எர்டிகா காரின் இந்த வளர்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
விலை மற்றும் மைலேஜ் (Mileage) ஆகியவை இதற்கு மிகவும் முக்கியமான காரணங்கள் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை வெறும் 8.69 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.03 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மாருதி சுஸுகி எர்டிகா காரின் பெட்ரோல்/மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் மாடல் ஒரு லிட்டருக்கு 20.30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது.
மறுபக்கம் மாருதி சுஸுகி எர்டிகா காரின் சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதவிர மாருதி சுஸுகி எர்டிகா காரில் பல்வேறு அதிநவீன வசதிகளும் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்துதான், மாருதி சுஸுகி எர்டிகா காரை வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக மாற்றியுள்ளன.