இந்தியாவில் மாருதி ஃப்ரான்க்ஸ் டர்போ வெலாசிட்டி எடிஷன் அறிமுகம் : சிறப்பம்சங்கள் என்னென்ன?
நாட்டின் மிக பெரிய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளரான மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு தனது ஃப்ரான்க்ஸ் எஸ்யூவி-யை (Fronx SUV) அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் நிறுவனம் சமீபத்தில் Fronx SUV-யின் புதிய வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.
டர்போ வெலாசிட்டி(Turbo Velocity) என்ற பெயரில் -யின் புதிய எடிஷனை நிறுவனம் இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய எடிஷன் முற்றிலும் எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் அக்சஸரீஸ்களில் காஸ்மெட்டிக் அப்கிரேட்ஸ்களை கொண்டு அறிமுகமாகி இருக்கிறது. Fronx-ன் Delta+, Zeta அல்லது Alpha வேரியன்ட்டை வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.43,000 செலுத்த தயாராக இருந்தால் இந்த Fronx Turbo Velocity எடிஷனை வாங்குவது குறித்து பரிசீலிக்கலாம்.
Fronx-ன் இந்த புதிய வெலாசிட்டி எடிஷனில் மொத்தம் 16 ஆக்சஸரீஸ்கள் உள்ளன. இதில் கிரே & பிளாக் எக்ஸ்டீரியர் ஸ்டைலிங் கிட, டோர் விசர்ஸ் (door visors), ORVM கவர், ஹெட்லேம்ப் கார்னிஷ், பாடி சைட் மோல்டிங், இலுமினேட்டட் டோர் சில் கார்ட், ரெட் டேஷ் டிசைனர் மேட், NeXCross Bordeaux ஃபினிஷ் ஸ்லீவ் சீட் கவர், 3டி பூட் மேட், ஸ்பாய்லர் எக்ஸ்டன்டர், வீல் ஆர்ச் கார்னிஷ், ஃப்ரன்ட் கிரில் கார்னிஷ், கார்பன் ஃபினீஷுடன் கூடிய இன்டீரியர் ஸ்டைலிங் கிட் உள்ளிட்ட எக்ஸ்டீரியர் & இன்டீரியர் அக்சஸரீஸ் பேக்கேஜை இந்த புதிய எடிஷனில் நிறுவனம் வழங்குகிறது.
பவர்டிரெய்னை பொறுத்தவரை மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ் எஸ்யூவி-யானது 89bhp பவர் மற்றும் 113Nm பீக் டார்க்கை உருவாக்கும் 1.2-லிட்டர் நேச்சுரலி-ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 99bhp பவர் மற்றும் 148Nm பீக் டார்க்கை உருவாக்கும் 1.0-லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் எஞ்சின் என 2 ஆப்ஷன்களில் கிடைக்கிறது. கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் மேனுவல், AMT மற்றும் ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் ஆகியவை அடங்கும். விலைகளை பொறுத்தவரை சமீபத்திய திருத்தத்துடன் Fronx எஸ்யூவி-யின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.51 லட்சத்தில் இருந்து ரூ.13.04 லட்சம் வரை இருக்கிறது.
இதனிடையே மாருதி சுசுகி நிறுவனம் Fronx-ன் 2023 மாடல்களில் ரூ.83,000 மதிப்புள்ள தள்ளுபடியை வழங்குகிறது. இதில் கேஷ் டிஸ்கவுன்ட்ஸ், எக்ஸ்சேஞ்ச் மற்றும் பல அடங்கும். Fronx-ன் நேச்சுரலி-ஆஸ்பிரேட்டட் மாடல்கள் மற்றும் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்ஸ்களுக்கு இந்த தள்ளுபடிகள் செல்லுபடியாகும். Fronx மாடலானது அறிமுகமான 10 மாதங்களில் 1 லட்சம் யூனிட்ஸ் என்ற விற்பனை மைல்கல்லை எட்டிய இந்தியாவின் அதிவேக பேஸஞ்சர் வெஹிகிளாக மாறி இருக்கிறது. இந்த விற்பனை வளர்ச்சியை தக்க வைக்கவே மாருதி நிறுவனம் Fronx காருக்கு தள்ளுபடிகள் மற்றும் இதன் புதிய டர்போ வெலாசிட்டி எடிஷனை அறிமுகப்படுத்தி இருப்பது குறிப்பிடதக்கது.