மசால் போண்டா ரூ.195, வாழைக்காய் பஜ்ஜி விலை கேட்டா தலையே சுத்துது, விமான நிலையத்தில் நடக்கும் பகல் கொள்ளை?! காரணம் என்ன?

தியேட்டர்களில் அதிக விலை வைத்து பாப் கார்ன், பப்ஸ், தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வெளியே இருந்து தின்பண்டங்கள் உள்ளே எடுத்து செல்லவும் அனுமதி மறுக்கப்படும். இதற்கே நிறைய பேர் நீதிமன்றங்களில் வழக்கு போடும் அளவிற்கு குற்றம் சாட்டி வருகின்றன.

ஆனால், இதை விட பல மடங்கு அதிக விலைக்கு மிக சாதாரண உணவு பொருட்கள் விற்பனை ஆகும் இடம் தான் விமான நிலையங்களில். அரைலிட்டர் குடிநீர் பாட்டில் கூட பல நூறு ரூபாய் கொடுத்து வாங்கி குடிக்க வேண்டும். சாதாரண இட்லி, தோசையை கூட உயர்ரக அசைவ உணவகங்களில் விற்கப்படும் பிரியாணிக்கான அளவு விலை கொடுத்து வாங்க வேண்டும்.

இப்படி தான் சமீபத்தில் ட்விட்டரில் @cring_i_neer என்ற பெயரில் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒரு நபர், திருவானந்தபுர விமான நிலையத்தில் வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, மசாலா போண்டா, சிக்கன் கட்லட் போன்றவற்றின் விலையை கண்டு வியந்து போய் அதை போட்டோ எடுத்து பகிர்ந்துள்ளார்.

அவர் பகிர்ந்திருந்த புகைப்படத்தின் மூலம், திருவானந்தபுர விமான நிலையத்தில், மசாலா போண்டா ஒன்றின் விலை ரூ.195, வாழைக்காய் பஜ்ஜி ஒன்றின் விலை ரூ.225, மிளகாய் பஜ்ஜி ஒன்றின் விலை ரூ.225, சிக்கன் கட்லட் ஒன்றின் விலை ரூ.275 மற்றும் கேரளா ஐட்டமான சுக்யன் (Sugyan) ஒன்றின் விலை ரூ.225 என தெரியவருகிறது.

விமான நிலையங்களில் உணவுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதன் காரணம் என்ன?
விமான நிலையங்களில் உணவு பொருட்களின் விலை அதிக அளவு வைத்து விற்க ஒரு முக்கிய காரணமாக இருப்பது, கடைகளின் வாடகை ஆகும். விமான நிலையங்களில் கடைகளை லைசன்ஸ் பெற்று நடத்த வேண்டும்.

https://twitter.com/cring_i_neer/status/1751560604694061515

சிறிய அளவிலான கடைகளுக்கு கூட பெருமளவு வாடகை கொடுக்க வேண்டி இருக்கிறது, மற்றும் வெளியிடங்களில் இருப்பது போல அவரவர் சௌர்யத்திற்கு உணவு எடுத்து சென்று விற்பனை செய்ய முடியாது. குறிப்பிட்ட அளவிலான உணவு மற்றும் உணவு எடுத்து செல்ல செக்யூரிட்டி ஸ்க்ரீனிங், லாஜிஸ்டிக்ஸ் என ஆபரேஷன் காஸ்ட் அதிகம் என கூறப்படுகிறது.

மேலும், பணியாட்களுக்கு அளிக்கப்படும் ஊதியமும் விமான நிலையங்களில் அதிகம் என கூறப்படுகிறது. இதுப்போன்ற காரணங்களால் தான் மிக சாதாரணமான உணவுகள் கூட விமான நிலையங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குறைப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *