நாளை மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்… திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!

முருகனின் ஆறுபடை வீடுகளில் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை ஓரம் இடத்தில் 2ம் படை வீடாக அமைந்திருக்கிறது திருச்செந்தூர். ஆறு படைவீடுகளில் திருச்செந்தூர் மட்டுமே கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது.

மற்ற 5 அறுபடைவீடுகளும் மலைகளின் மீது தான் அமைந்துள்ளது. இதனால் திருச்செந்தூர் கோவில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருடத்தின் எல்லா நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

உற்சவங்களும், திருவிழாக்களும் களைகட்டும். அந்த வகையில் மாசித் திருவிழா மிக முக்கிய திருவிழாவாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து 12 நாட்கள் திருவிழாவில் பெரிய தேரில் சுவாமியும், தெய்வானையும் வலம் வருவதைக் காண உலகம் முழுவதும் இருந்து ஏராளாமான பக்தர்கள் வருகை தருவர். மாசித் திருவிழா நாளை பிப்ரவரி 14 ம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 4.30 மணிக்கு திருக்கோயில் செப்பு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்படும். 5ம் நாளில் அதாவது பிப்ரவரி 18 ம் தேதி இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனையும், 20 ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும் காண கண்கோடி வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *