மாசிக்காய்.. மிகப்பெரிய வரப்பிரசாதம்.. கைக் குழந்தைகளை காக்கும் “ஆச்சரிய பால்” மாசிக்காய் மகத்துவம்
காய் என்று சொல்கிறோமே தவிர, இது நிஜமாகவே காய் கிடையாது. இது ஒரு மரத்தின் பிசின்.. இந்த பிசின்தான் காய்ந்து, மாசிக்காய் ஆகிறது…இன்னும் சொல்லப்போனால் இது பிசினும் கிடையாது.. இந்த மரத்தின் கிளைகளை ஒருவித பூச்சிகள், துளையிடும்போது, அதன் கிளையிலிருந்து பால் வடிந்து வெளியேவரும்.. அது உறைந்து திரண்டு கெட்டிப்பட்டுவிடும்.. அதுதான் மாசிக்காய்.
நோயெதிர்ப்பு சக்தி: மிகச்சிறந்த நோயெதிர்ப்பு சக்தி நிறைந்த மருந்து இதுவாகும்.. பச்சிளம் குழந்தைகளுக்கு வசம்பு எந்த அளவுக்கு உபயோகப்படுகிறதோ, அந்த அளவுக்கு மாசிக்காயும் பயன்படுகிறது.. அன்றைய காலங்களில், சுவாசக்கோளாறு முதல் வயிற்றுப்போக்கு வரை மொத்தத்துக்கும் ஒரே மருந்தாக, இந்த மாசிக்காய் பயன்பட்டது.
மாசிக்காயை ஜாதிக்காய், வசம்பு, அதிமதுரம், கடுக்காய், சுக்கு, திரிகடுகம், சித்தரத்தை போன்ற பொடிகளுடன் சேர்த்து, கற்பூரவல்லி சாற்றில் அவைகளை கலந்து, வெயிலில் காயவைத்து எடுத்து வைத்து கொள்வார்கள்.
வயிறு உப்பசம்: பச்சிளம் குழந்தைகளுக்கு மந்தம், வயிறு உப்புசம் பிரச்சனை இருந்தாலோ, அல்லது பசி எடுக்காவிட்டாலோ, அல்லது குழந்தை பால் குடிக்காவிட்டாலோ, காயவைத்த இந்த உருண்டையில் சிறிதளவு எடுத்து, லேசாக இழைத்து, அதில் தாய்ப்பால் சில துளிகள் விட்டு, குழந்தைகளின் நாக்கில் தடவி விடுவார்கள்.
இதனால், அஜீரணம் சரியாகி, குழந்தை பால்குடிக்க ஆரம்பிக்கும். அதேபோல, குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருந்தால், மாசிக்காயை உரைகல்லில், சிலதுளி தாய்ப்பால் விட்டு இழைத்து, குழந்தையின் நாக்கில்தடவி விடுவார்கள்.. இதனால், குழந்தைக்கு வயிற்றுப்போக்கு உடனே நீங்கிவிடும்..
தாய்ப்பால்: குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், இளைப்பு, போன்ற பிரச்சனைகளுக்கு மாசிக்காயை மருந்துபோல தருவார்கள்.. மாசிக்காயை தாய்ப்பால் விட்டு இழைத்து குழந்தையின் நாவில் தடவி வந்தால் பேதி நின்றுவிடுமாம்.
குழந்தைகளை தவிர பெரியவர்களுக்கும் இந்த மாசிக்காய் உதவுகிறது.. சுவாசக்கோளாறுகள், தொண்டை பிரச்சனைகள் போன்ற கோளாறுகளுக்கு ஆஸ்பத்திரி, ஆபரேஷன் பக்கமே அந்த காலத்தில் போகமாட்டார்களாம்.. மாசிக்காய் இந்த கோளாறுகளை அசால்ட்டாக சரிசெய்யக்கூடியதாம்.
தொண்டைவலி: திருநீற்றுப் பச்சிலையுடன், சிறிது வறுத்த மிளகு, மாசிக்காய் சேர்த்து அரைத்து தொண்டையில் தடவி வந்தால், தொண்டை பாதிப்பு சீராகும். தொண்டைவலி மட்டுமல்ல, இருமல், ஜலதோஷம், தொண்டை கமறல் போன்றவை நீங்கிவிடும்.
மாசிக்காயை வெறும் தண்ணீரில் சேர்த்து வாய் கொப்பளித்தாலே, பல் ஈறுகள் குணமாவதுடன், வாய்ப்புண்களும் சரியாகும். ஈறுகளில் ரத்தம் கசிந்தாலும் ஈறுகளில் வலி இருந்தாலும், மாசிக்காயை அப்படியே வாயில் போட்டு உமிழ்நீரோடு கலந்து சாறை மட்டும் விழுங்கினால், வலி நிற்கும். மாசிக்காயை தண்ணீரில் இழைத்து, ஆசனவாயில் வைத்துவந்தால், மூல பாதிப்புகள் குணமாகும்,. இந்த விழுதை தீப்புண்கள் மீது வைத்து வந்தாலும், காயங்கள் விரைவில் ஆறும்.
சேற்றுப்புண்: கால் விரல்களில் சேற்றுப்புண்கள் இருந்தாலும், மாசிக்காயை தண்ணீரில் குழைத்து புண் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் சேற்றுப்புண் நீங்கிவிடும். நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் கட்டி, புண் இருந்தால், இந்த மாசிக்காயை பயன்படுத்தலாம். அடிபட்டு ரத்தம் வந்தாலும், அல்லது அதிக ரத்தம் வெளியேறினாலும், இந்த மாசிக்காயை இழைத்து தடவலாம். அடிபட்டு ரத்தம் வந்தாலும், அல்லது அதிக ரத்தம் வெளியேறினாலும், இந்த மாசிக்காயை இழைத்து தடவலாம்.
ஆண்களுக்கு இந்த மாசிக்காய் வரப்பிரசாதம் எனலாம்.. மாசிக்காய், கடுக்காய், ஜாதிக்காய், ஆவாரம்பசை, கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை பவுடர் செய்து, அத்துடன் வல்லாரை இலைப்பொடியை சேர்த்து, தினமும், நெய்யில் கலந்து சாப்பிட்டாலே போதும்.. உடல் சூடு தணிந்து, நரம்புகள் பலம்பெற்று, ஆண்மை கோளாறுகள் நீங்கிவிடும்.
ரத்தப்போக்கு: பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் மாசிக்காய் பேருதவி புரிகிறது.. மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வயிற்றுவலி, அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பாதிப்புகளை இந்த காய் சரி செய்யக்கூடியது.. மாசிக்காயை, தேனில் குழைத்து, தினமும் 3 வேளை சாப்பிட்டாலே போதும்..
அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் மாசிக்காயை போட்டு காய்ச்சி, அந்த தண்ணீரை குடித்து வந்தாலே போதும்.. பெண்களின் வெள்ளைப்படுதல் பாதிப்பு குணமாகும். அல்லது மாசிக்காயை பவுடராக்கி, அதை பாலில் கலந்து, தினமும் குடித்து வந்தாலே, மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் வலிகள், சோர்வு நீங்கிவிடும். கர்ப்பப்பையில் இருக்கும் அழுக்குகள், நச்சுக்களை நீக்கும் சக்தி இந்த மாசிக்காய்களுக்கு உண்டு…
ஜாதிக்காய்: முகப்பரு பிரச்சனை இருந்தால் அதற்கும் மாசிக்காய் உதவுகிறது.. மாசிக்காய், ஜாதிக்காய் இரண்டையும் சிலதுளிகள் தண்ணீர்விட்டு, கல்லில் இழைத்து, எலுமிச்சம் சாறு கலந்து தடவினால், முகப்பருக்கள் மறைந்துவிடும்.
மாசிக்காய், ஜாதிக்காய், கிராம்பு இந்த மூன்றையும் பவுடராக்கி, முகத்தில் தடவி, சிறிது நேம் கழித்து கழுவிவந்தால், முகம் பொலிவு பெறும்.. தேமல், படை, சொறி, சிரங்கு இருந்தாலும், மாசிக்காய் பொடியை தினமும் தண்ணீரில் குழைத்து தடவி வந்தால் தீர்வு கிடைக்குமாம்.