ஹீரோ நிறுவனத்தில் Mavrick 440 பைக் அறிமுகம்.. எப்படி இருக்கு லுக்?

உலகின் மிக பெரிய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) புதிய ஃபிளாக்ஷிப் மோட்டார் சைக்கிளான Mavrick-ஐ இந்தியாவில் இன்று அறிமுகம் செய்தது. இந்த புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரீமியம் மோட்டார் சைக்கிள் பிரிவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண நிறுவனம் தயாராகி வருகிறது.
எனினும் இந்த புதிய பைக்கானது இந்த பைக் ஹார்லி-டேவிட்சன் X440-ஐ அடிப்படையாக கொண்டு அதன் சில அடிப்படைகளை பகிர்ந்து கொள்ள கூடியதாக இருக்கும் என்பதை இங்கே குறிப்பிடுகிறோம். இந்த ஆண்டு இந்த நிறுவனம் வெளியிடும் முதல் தயாரிப்பு இதுவாகும். இது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் பைக்காக இருக்கும்.
இந்த புதிய 440சிசி மோட்டார் சைக்கிளின் பெயர் குறித்து ஏராளமான ஊகங்கள் வெளியான நிலையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இதற்கு Mavrick என்று பெயரிடப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. நிறுவனம் சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியாவில் ஒரு டீசரை வெளியிட்டது, அதில் புதிதாக அறிமுகப்படுத்த உள்ள தனது புதிய தயாரிப்பின் பெயர் Mavrick என்பதை வெளியிட்டது
இதற்கிடையே வரவிருக்கும் Mavrick-ன் முதல் ஸ்பை ஷாட், ஹார்லி டேவிட்சன் X440 பைக்குடன் ஒப்பிடும் போது சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது. Hero Mavrick பைக்கானது ஹார்லியின் அப்சைட்-டவுன் யூனிட்டிற்குப் பதிலாக டெலஸ்கோபிக் ஃபோர்க்கைக் கொண்டிருக்கும் என தெரிகிறது. ஹார்லி டேவிட்சன் X440 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.40 லட்சம் முதல் 2.80 லட்சம் வரை இருக்கும் நிலையில், இந்த புதிய பைக்கின் விலை வரம்பு இதை விட சற்று குறைவாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல சமீபத்தில் வெளியான Hero Mavrick 440 பைக்கின் ஸ்பை ஷாட், எச்-ஷேப்ட் LED DRL உடன் ரீடிசைன் ஹெட்லைட் மற்றும் வேறு டிசைன் கொண்ட சக்கரங்கள் உட்பட பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்களை இருப்பதை வெளிப்படுத்தியது. இளம் வயதினரை கவரும் வகையில் புதிய Mavrick மோட்டார் சைக்கிளானது, ஸ்போர்ட்டி லுக் மற்றும் சிறந்த ரைடிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் என்று கூறப்படுகிறது.
Mavrick-ல் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
ஆல்-எல்இடி லைட்டிங், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியுடன் கூடிய டிஜிட்டல் கன்சோல், டூயல்-சேனல் ஏபிஎஸ், USB போர்ட், சைட்-ஸ்டாண்ட் சென்ஸார், பார்-என்ட் மிரர்ஸ், ஸ்மால் டேங்க் எக்ஸ்டன்ஷன்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் இந்த பைக்கில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில் இடம்பெறும் தனித்துவமான LED DRL போன்ற மறுவடிவமைப்பு செய்யப்பட்ட காம்போனென்ட்ஸ் பைக்கின் ஒட்டுமொத்த லுக்கிற்கும் நவீனத்துவத்தை சேர்க்கிறது. மேலும் இந்த பைக்கில் TFT ஸ்கிரீன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்கள் இருக்க கூடும்.
Harley-Davidson X440 பைக்கில் காணப்படும் அதே 440cc சிங்கிள்-பாட் லிக்விட்-கூல்ட் எஞ்சின் புதிய
Mavrick 440-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த எஞ்சின் 6,000rpm-ல் 27bhp ஆற்றலையும் 4,000rpm-ல் 38Nm பீக் டார்க்கையும் உற்பத்தி ட்ரையம்ப் ஸ்பீட் 400, ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350, ஹண்டர் 350 மற்றும் ஹார்லி டேவிட்சன் வி440 உள்ளிட்ட மோட்டார் சைக்கிள்களுடன் புதிய Mavrick போட்டியாக இருக்கும்.