வாயில் கரையும் ஸ்வீட்: இதுக்கு முன்னாடி இதை சாப்பிட்ருக்க மாட்டீங்க
இந்த ஸ்வீட் ஒரு முறை செய்தால். மீண்டும் மீண்டும் கேப்பாங்க.
தேவையான பொருட்கள்
2 கப் கடலை மாவு
அரை கப் பால்
முக்கால் கப் நெய்
1 கப் சர்க்கரை
அரை கப் தண்ணீர்
அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள்
பொடித்த பாதாம், பிஸ்தா
செய்முறை : கடலை மாவில் பால், நெய் சிறிய அளவில் சேர்த்து பிசைந்து கொள்ளவும். தொடர்ந்து அதை சல்லடையில் சலிக்கவும். இனியொரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, அதில் இந்த மாவை சேர்த்து கிளரவும். ஆரஞ்சு நிறத்தில் மாறும்வரை கிளரவும். தொடர்ந்து இனியொரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை சேர்த்து பாகு தயாரித்து கொள்ளவும். ஆரஞ்சு நிறத்தில் மாறியதும், இந்த பாகை அதில் சேர்த்து கிளரவும். இதை பட்டர் தடவிய ட்ரேயில் தட்டிக்கொள்ளவும். அதற்கு மேலாக உடைத்த நட்ஸை தூவ வேண்டும். 1 மணி நேரம் கழித்து சதுரங்களாக வெட்டிக்கொள்ளவும். சுவையான மொஹந்தால் ஸ்வீட் ரெடி.