ஆன்லைன் ஷாப்பிங்கில் பெண்களை மிஞ்சும் ஆண்கள்! பேஷன், எலக்ட்ரிக் சாதனங்கள் ஷாப்பிங் அதிகம்!

பொதுவாக பெண்கள் தான் அதிகமாக ஷாப்பிங் செய்வார்கள் என்று சொல்லப்படுவது வழக்கம். ஆனால், சமீபத்தில் ஐஐஎம் நடத்திய ஆய்வு ஒன்றில் ஆன்லைன் அதிகமாக ஷாப்பிங் செய்பவர்கள் ஆண்கள்தான் என்று தெரியவந்துள்ளநு. அகமதாபாத்

இந்தியாவில் உள்ள 25 மாநிலங்களைச் சேர்ந்த 35,000 நபர்களிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். ஆன்லைன் மூலமே நடந்ததிய இந்த ஆய்வு முடிவில், ஆண்கள் சராசரியாக ரூ.2,484 ஆன்லைன் ஷாப்பிங் செய்ய செலவிடுகிறார்கள் என்றும் பெண்கள் சராசரியாக ரூ.1,830 க்கு ஷாப்பிங் செய்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது ஆண்கள் பெண்களைவிட 36% அதிகம் செலவழிக்கிறார்கள்.

‘சில்லறை விற்பனை மையங்களும் நுகர்வோரும்: ஓர் இந்தியப் பார்வை’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை அகமதாபாத் ஐஐஎம்மின் டிஜிட்டல் மாற்றத்துக்கான மையம் வெளியிட்ட்டுள்ளது.

இந்த ஆய்வுக் கட்டுரையில், 47% ஆண்கள் ஃபேஷன் ஆடைகளுக்காக ஷாப்பிங் செய்வதாகக் கூறியுள்ளனர். அதேபோல பெண்களில் 58% பேர் ஃபேஷன் ஆடைகளுக்காக ஷாப்பிங் செய்கிறார்கள். 23% ஆண்களும் 16% பெண்களும் எலக்ட்ரானிக் சாதனங்களை ஷாப்பிங் செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.

டெல்லி, சென்னை, மும்பை போன்ற முதல் நிலை நகரங்களுடன் ஒப்பிடும்போது, ஜெய்ப்பூர், லக்னோ, நாக்பூர், கொச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் ஃபேஷன் ஆடைகளை ஷாப்பிங் செய்வது 63% அதிகமாக உள்ளது. இதேபோலவே மின்னணு சாதனங்களை வாங்குவதும் 21% அதிகமாக உள்ளது.

முதல் நிலை நகரங்களில் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய நுகர்வோர் செலவு செய்யும் தொகை சராசரியாக ரூ.1,119 ஆக உள்ளது. இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை நகரங்களில் சராசரியாக முறையே ரூ. 1,870, ரூ. 1,448 மற்றும் ரூ. 2,034 மதிப்பில் ஆன்லைன் ஷாப்பிங் செய்கிறார்கள்.

பேஷன் பொருட்கள் மற்றும் ஆடைகள் வாங்கும் நுகர்வோரில் 87 சதவீதம் பேர் கேஷ் ஆன் டெலிவரி முறையில்தான் வாங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *