மிரட்டலான லுக்… பக்காவான அப்டேட்ஸ்… புதிய பஜாஜ் பல்சர் NS 160, NS200 பைக் அறிமுகம்!

புதிய பல்சர் பைக்குகளில் முன்புறம் உள்ள இடி போன்ற வடிவத்தில் புதிய டிசைனில் இருக்கும் எல்இடி ஹெட்லைட் அமைப்பு மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றமாகும். LED டர்ன் சிக்னல்களும் லைட்டிங் தொகுப்பில் உள்ளன.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் NS சீரிஸில் NS160 மற்றும் NS200 பைக்குகளின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2024 மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.1.46 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் இந்த பைக்குகள் டிசைன் மற்றும் தொழில்நுட்ப அப்டேட்டுடன் வந்துள்ளன.

புதிய பல்சர் பைக்குகளில் முன்புறம் உள்ள இடி போன்ற வடிவத்தில் புதிய டிசைனில் இருக்கும் எல்இடி ஹெட்லைட் அமைப்பு மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றமாகும். LED டர்ன் சிக்னல்களும் லைட்டிங் தொகுப்பில் உள்ளன.

இந்த பைக்குகள் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலையும் கொண்டுள்ளன. புளூடூத் இணைப்பு வசதியைக் கொண்ட இந்த கன்சோல் போன் கால்ஸ், எஸ்எம்எஸ், போன் பேட்டரி சதவீதம் மற்றும் மொபைல் சிக்னல், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் போன்ற பல தகவல்களைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல நவீன அப்டேட்ஸ் இருந்தாலும், NS160 மற்றும் NS200 இன் முக்கிய அம்சங்கள் மாறாமல் உள்ளன. NS160 ஆனது 17.2 hp மற்றும் 14.6 Nm டார்க் கொடுக்கும் 160.3cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் கொண்டதாகவே தொடர்கிறது.

மறுபுறம், NS200 பைக் 24.5 hp மற்றும் 18.74 Nm டார்க் கொடுக்கும் 199.5cc, குளிரூட்டப்பட்ட எஞ்சின் கொண்தாக இருக்கிறது. இரண்டு என்ஜின்களும் முறையே 5-ஸ்பீடு மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட பஜாஜ் பல்சர் NS160 மற்றும் NS200 பைக்குகள் இதே பிரிவில் உள்ள டிவிஎஸ் அப்பாச்சி (TVS Apache RTR 160 4V), ஹீரோ எக்ஸ்ட்ரீம் (Hero Xtreme 160R) மற்றும் ஹோண்டா ஹார்னெட் (Honda Hornet 2.0) போன்ற பைக்குகளுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *