Menstrual Breast Pain : மாதவிடாய்க்கு முன்னர் மார்பகங்களில் வலி! தீர்க்கும் வழிகள்!
மாதவிடாய்க்கு பெண்களுக்கு ஏற்படும் மார்புக வலிகளுக்கு சைக்கிக் மாஸ்டால்ஜியா எனப்படுகிறது. அது பெண்களுக்கு பெண்கள் மாறுபடும். வலி, பாரம், வீக்கம், நிப்பிள் வலி ஆகியவை பொதுவான ஒன்றாகும். சிலருக்கு அக்குளில் கூட வலி ஏற்படும். அதனால் அவற்றை தீர்க்கும் வலிகளை தெரிந்துகொள்ளுங்கள்.
400 பெண்களை வைத்து 2015ம் ஆண்டு நடைபெற்ற ஒரு ஆய்வில், இந்த பிரச்னை 60 சதவீத பெண்களுக்கு ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டது. 22.5 முதல் 37.5 சதவீதம் பெண்கள் மிதமான வலியை உணர்கிறார்கள் என்று டிராபிகல் பயோமெடிசின் ஏசியன் பசிபிக் ஜர்னல் ஆஃப் டிராபிக்கல் குறிப்பிட்டுள்ளது.
வலி ஏன் ஏற்படுகிறது?
ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுவதால் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு மார்பகங்களில் வலி ஏற்படுகிறது. இது மார்பில் உள்ள திசுக்களில் அழற்சியை ஏற்படுத்தி மார்பக வலி, இறுக்கம், கனமாதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
வலியை குறைக்கும் வழிகள்
மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். வீட்டிலேயே தீர்க்கும் வழிகளும் உள்ளன.
ப்ரா அணிவதில் கவனம்
ப்ராக்களை அணியாமல், லூசான ஷிம்மி அல்லது ஸிலிப்களை அணிவது நல்லது. இது பெரிய மார்பகங்கள் இருக்கும் பெண்களுக்கு நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
உணவில் மாற்றம்
உப்பு, காஃபி, ஆல்கஹால் ஆகியவை மார்பகங்களில் வீக்கத்தை ஏற்படுத்துபவை. எனவே மாதவிடாய் காலங்களில் அவற்றை தவிர்ப்பது நல்லது.
ஐஸ் ஒத்தடம்
மாதவிடாய் காலங்களில் வலி ஏற்படும் இடங்களில் ஐஸ் அல்லது சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுங்கள். உங்கள் மார்பகங்களில் அவற்றை வைத்து ஒத்தடம் கொடுக்கும்போது, அது வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
சூடான தண்ணீரில் குளியல்
இது குளிர் காலம் என்பதால், சூடான தண்ணீரில் குளிப்பது உங்கள் தசைகளுக்கு இதமாக இருக்கும். ஆனால் அதிக சூடான தண்ணீர் வேண்டாம். அது உங்கள் சருமத்தை வறண்டதாக்கிவிடும்.
இதமான மசாஜ்
நீங்கள் மசாஜ் சென்டர்களுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை. ஆனால் நீங்கள் வீட்டிலிருந்து நீங்களாவே எளிய மசாஜ்களை செய்து ரிலாக்ஸ் ஆகலாம். மார்பகங்களை மிருதுவாக தடவிக்கொடுப்பதே போதும். உங்களுக்கு இதமளிக்கும்.
உடற்பயிற்சி
உங்களுக்கு மாதவிடாய் காலம் என்றால், உடற்பயிற்சி செய்வது கடினமான ஒன்று என்று உங்களுக்கே தெரியும். ஆனால் சாதாரண சில உடற்பயிற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதுவே உங்கள் மனநிலையை மாற்றி வலியை போக்கும்.
மனஅழுத்தத்தை கையாளும் முறை
உடலில் எந்த உபாதை ஏற்பட்டாலும் மனஅழுத்தம் அதை அதிகரிக்கும். எனவே மனதை அமைதிப்படுத்தும் நுட்பங்களை பழகுங்கள். தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சிகள் செய்வது உங்களின் வலியை போக்கும்.
ஈவ்னிங் பிரிம்ரோஸ்
ஈவ்னிங் பிரிம்ரோஸ் எண்ணெய், உங்களின் மார்பக வலி அறிகுறிகளை குறைக்கும். அதை உங்கள் தேநீரில் சில சொட்டுகள் சேர்த்து பருகலாம். இதை நீங்க சுடுதண்ணீரில் கலந்தும் பருகலாம்.
மஞ்சள்
மஞ்சள் நமது சமையலறையில் உள்ள ஒரு பொருள்தான். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அழற்சி மற்றும் வீக்கத்தை தடுக்க உதவுகிறது. சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள் கலந்து சாப்பிட மார்பக வலிகள் குறையும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்