Merry Christmas 2023: உலக ரட்சகர் இறைமகன் பிறந்த தினம் இன்று
உலக ரட்சகராக போற்றப்பட்ட வரும் இயேசுநாதருக்கு உலகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் இருந்து வருகின்றனர். இன்று வரை கிமு கிபி என பிரிக்கப்பட்டு ஆண்டுகள் கணக்கிடப்படுவது இவருடைய பிறப்பை வைத்து உண்டாக்கப்பட்டுள்ளது.
2000 ஆண்டுகளுக்கு முன்பு யூதேயா நாட்டில் பெத்தலகேம் என்னும் சிற்றூரில் தச்சராக பணியாற்றிய யோசேப்பு மரியா தம்பதிக்கு மகனாக பிறந்தவர் இயேசு கிறிஸ்து. கன்னியாக இருந்த மரியாளின் வயிற்றில் கடவுளால் கொடுக்கப்பட்ட குழந்தை தான் இயேசு கிறிஸ்து. அதனால் இவர் இறைவனின் மகன் என போற்றப்பட்டு வருகிறார்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கு ஒரு முக்கிய நோக்கம் இருந்தது. அன்பே இவருடைய பிறப்பின் அடிப்படை நோக்கமாகும். இந்த உலகத்தில் பாவம் என்கின்ற அமைதியான அமைப்பில் நிறைந்திருக்கக் கூடாது என்பதை அறிவுறுத்துவதற்காக இயேசு கிறிஸ்து பிறந்தார்.
மனிதர்களால் உருவாக்கப்பட்ட அரசியல், சமூகம், பொருளாதார, கலாச்சாரம் உள்ளிட்டவைகளில் இருந்து தனிமனித விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவே இயேசு கிறிஸ்து பிறந்தார் என கூறப்படுகிறது.
இதை உணர்த்துவதற்காகவே இறைவனின் பிள்ளையான இயேசு கிறிஸ்து அரண்மனையில் பிறக்காமல் மாட்டு தொழுவத்தில் ஏழ்மையான நிலையில் பிறந்தார். முதன்முதலில் இயேசு பிறப்பு குறித்து ஆடுகள் மேய்க்கும் மேய்ப்பர்களுக்கு இறைத்தூதர்களால் நற்செய்தி அறிவிக்கப்பட்டது.
அதற்குப் பிறகு ஏழை மக்களின் வாழ்வை எடுத்துரைப்பதற்காகவே, அவர்களுக்காக பிறப்பெடுப்பதற்காகவே இயேசு கிறிஸ்து மாற்று தொழுவத்தில் மிகவும் எளிமையாக பிறந்தார். எந்த காலகட்டத்திலும் இருக்கக்கூடிய அடிமைத்தனம், ஆண், பெண் வேறுபாடு, நிற வேறுபாடு, இனமொழி வேறுபாடு, வன்முறைகள் உள்ளிட்ட கலாச்சாரங்களில் யாரும் ஈடுபடாமல் ஒற்றுமையோடு அன்பாக வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இயேசு கிறிஸ்து பிறப்பெடுத்தார்.
தச்சராக வேலை செய்து வந்த தனது தந்தையோடு சேர்ந்து தச்சு வேலை பார்த்திருக்கிறார் இயேசுநாதர். அதன்பின் அன்பை வெளிப்படுத்தி மக்களிடம் அன்பை பரப்பி வந்தார் இயேசுநாதர். உலக மக்களின் பாவங்களை போக்குவதற்காகவே தனது உயிரை கொடுத்தார் என புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது.
சமாதானத்தை உணர்த்துவதற்காக பிறந்த இறைமகனின் பிள்ளைக்கு பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வேறுபாடு இன்றி ஒற்றுமையோடு வாழ வேண்டும் என உணர்த்துவதற்காக எளிமையாக பிறந்த இயேசு கிறிஸ்துவுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்