மெய்மறக்கும் அழகு: மூணாறு டூ போடிமெட்டு நெடுஞ்சாலை: நெட்டிசன்களை கவர்ந்தது எப்படி?

மூணாறு டூ போடிமெட்டு சாலை அழகியலை நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. மேலும் இந்த சாலையில் பயணித்த நபர்களை இந்த பயணத்தை மறக்க இயலவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தமிழகத்தில் உள்ள தனுஷ்கோடி வரை தேசிய நெஞ்சாலை என்எச்- 85ல் மேம்பாட்டு பணிகள் நடந்தன. இதில் 41 கிலோமீட்டர் நீள மூணாறு – போடிமெட்டு சாலை அடங்கும். இது 381.76 கோடி ரூபாய் மதிப்பில் இருவழி சாலையாக அகலப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 4 மீட்டராக இருந்த அகலம். தற்போது 15 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அகலப்படுத்தப்பட்ட சாலையில் பயணிகள் பாதுகாப்பை அதிகரிக்க ஜீப்ரா கோடுகள், வழிகாட்டும் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அகலப்படுத்தப்பட்ட சாலையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஜனவரி 5ம் தேதி திறந்து வைத்தார். பெங்களூரில் இருந்து பயணம் செய்பவர்கள், சேலம் – திண்டுகல் சாலையை அடைந்தால், என்.எச்- 85 கொச்சி- தனுஷ்கோடி நெஞ்சாலையை அடையலாம்.
இந்நிலையில் இந்த சாலையை போன்று இனி எந்த சாலையும் புதிதாக வர வேண்டாம் என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். மேலும் இந்த சாலையில் பணிப்பதற்கு நிகராக வேறும் எதுவும் இருக்காது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.