தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருக்கு மெட்ரோ இரயிலா!! ஒப்பந்தம் கையெழுத்து… வேலை ஆரம்பிக்க போகுது!

தென்னிந்தியாவின் முதல் நகரங்களுக்கு-இடையேயான மெட்ரோ இரயில் சேவை பெங்களூர் மற்றும் ஓசூர் இடையே வர உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக இந்த இரு நகரங்களுக்கு இடையே மெட்ரோ இரயில் சேவை வருவதற்கு காரணம் என்ன? என்பதையும், இதன் மூலம் இந்த இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் எவ்வளவு குறையும்? என்பதையும் இனி பார்க்கலாம்.

மெட்ரோ இரயில்களின் சிறப்பம்சமே அவற்றின் அதிவிரைவான பயணம் ஆகும். மேம்பாலங்களிலும், சுரங்கங்களிலும் மெட்ரோ இரயில் சேவை கொண்டுவரப்படுவதினால், மற்ற போக்குவரத்துகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, மெட்ரோ இரயில்கள் எதிர்காலத்தில் ஆளில்லாமல் தன்னிச்சையாக இயங்கக்கூடிய வகையில் வருவதற்கு வாய்ப்புள்ளதால், மனித பிழைகளும் தவிர்க்கப்படும்.

இதன் காரணமாகவே, மெட்ரோ இரயில் சேவையில் அரசாங்கங்கள் தீவிரமாக உள்ளன. இதன் விளைவாக, மெட்ரோ இரயில் சேவை இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் வந்துவிட்டன. நகரத்திற்குள் பயணிப்பதற்கு மெட்ரோ இரயில் சேவை மிகவும் ஏற்றதாகவும், விரைவானதாகவும் இருப்பதால், இரு நகரங்களுக்கு இடையேயும் மெட்ரோ இரயில் சேவைகள் கொண்டுவரப்படுகின்றன.

இந்த வகையில், தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூர் மற்றும் தமிழ்நாட்டின் ஓசூருக்கு இடையே இரு நகரங்களுக்கு இடையேயான மெட்ரோ இரயில் சேவை கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூர் மாநகரில் ஏற்கனவே பல்வேறு லைன்களில் மெட்ரோ இரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

அதில் தெற்கை நோக்கி செல்லும் லைன் பொம்மசந்த்ரா வரையில் உள்ளது. பொம்மசந்த்ராவில் இருந்து தமிழ்நாட்டின் ஓசூர் நகரம் வெறும் 20 கிமீ தொலைவில் உள்ளது. தற்போதைக்கு ஓசூரில் மெட்ரோ இரயில் சேவை இல்லை என்றாலும், 20 கிமீ தொலைவிற்கு மெட்ரோ இரயில் சேவையை கொண்டுவருவது ஒன்றும் கடினமான விஷயம் அல்ல.

இது நிஜமாகும் பட்சத்தில், தென்னிந்தியாவில் முதல்முறையாக இரு மாநிலங்களை இணைக்கும் வகையிலான மெட்ரோ இரயில் சேவையாக இது இருக்கும். இதில் ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், இந்த இண்டர்-சிட்டி மெட்ரோ இரயில் சேவை குறித்த அப்டேட் ஆனது சென்னை மெட்ரோ இரயிலின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த இண்டர்-சிட்டி மெட்ரோ இரயில் சேவை ஆனது தற்போதைக்கு மிகவும் ஆரம்பக்கட்ட நிலையில்தான் உள்ளது. எந்த அளவிற்கு என்றால், இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான ஒப்பந்தமே இப்போதுதான் கையெழுத்தாகி உள்ளது. உலகளவில் பிரபலமான பாலாஜி ரெயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஹபோக் கன்சல்டன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு ரூ.29.44 லட்சம் ஆகும். அதாவது, பொம்மசந்த்ரா – ஓசூர் இடையேயான 20 கிமீ தொலைவிற்கு மெட்ரோ இரயில் சேவையை வழங்குவதற்கு எந்த அளவிற்கு சாத்தியம் உள்ளது என்பதை கண்டறிவதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான செலவீட்டு தொகையாக இந்த ரூ.29.44 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *