மெட்டி ஒலி நாடகத்தை பாராட்டிய கலைஞர்!
ஒரு சமயம் மெட்டி ஒலி என்ற நாடகம் ஒளிபரப்பானது. அனைவருக்கும் தெரியும். அதன் பாடலில் இருந்து அதன் கதையிலிருந்து அது மாபெரும் ஹிட் ஆனது அனைவருக்கும் தெரியும்.
அப்படி அந்த மெட்டி ஒலி நாடகத்திற்கு பாராட்டு விழா எடுக்கப்பட்ட பொழுது கலைஞர் பேசியது தான் இது.
கலைஞர் ” மெட்டி ஒளியை நாங்கள் அனைவரும் பார்த்திருக்கிறோம் வசதி இருக்கிறோம் என்று பலரும் கூறினார்கள். ஆனால் மெட்டி ஒலி ஒளிபரப்பாகும் நேரம் எனக்கு பொருந்தாத நேரம். அந்த நேரத்தில்தான் அரசியல், இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருப்பேன்
மெட்டி ஒளியில் மொத்தம் 810 அத்தியாயங்கள் இருப்பினும் 400 அத்தியாயங்களை பார்த்து ரசித்திருக்கிறேன்.
இந்த அத்தியாயங்களில் பார்த்ததில் இருந்தே தெரிகிறது மெட்டி ஒலி மிகவும் பாராட்டுக்குரிய ஒரு தொடர் இன்று. என்று சொன்னார்.
மேலும் ” மெட்டி ஒலியில் ஒரே ஷாட்டில்காட்சிகள் படமாக்கப்பட்டது சாதனை என்றார்கள். டி.வி.யில் இதுதான் முதல் முறை என்றார்கள். நான் வசனம் எழுதிய ராஜா ராணி படத்தில் 850 அடி நீள காட்சியை ஒரே ஷாட்டில் நடிகர் சிவாஜி கணேசன் வசனம் பேசி நடித்திருக்கிறார்.
அம்மையப்பன் என்ற படத்திற்காக வேறு ஒரு நடிகருக்கு எழுதப்பட்ட வசனத்தை நான் பேச மாட்டேன் என்று சிவாஜி சொல்ல, சவாலாக எடுத்து ஒரே நாள் இரவில் அந்த காட்சி வசனத்தை நான் எழுதித்தர ஒரே ஷாட்டில் சிவாஜி பேசி முடித்தார்.
இடை இடையில் கலைஞர் தனது பேச்சால் அனைவரையும் ஈர்த்தார். வீடு கெடுவதற்கு மாமியாரும், நாடு கெடுவ தற்கு சாமியாரும் காரணம் என்று கூற அனைவரும் சிரித்து விட்டார்கள்.
மேலும் ஐந்து பெண்களின் கதை இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் பாரதத்திலும் 5 பேர் அல்லவா என்று கலைஞரின் பேச்சு மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. மேலும் அவர் பேசும் பொழுது எந்த ஒரு குறிப்பையும் பார்க்காமல் பேசினார். அதேபோல் இந்த வயதிலும் மொழிபிரலாமலும் பேசி இருந்தார்.