Midlife Crisis : உங்கள் வாழ்வை மாற்றப்போகும் தொடர் – 40+ல் ஏற்படும் பிரச்னைகளுக்கு இதோ எளிய தீர்வு!
மிட் லைஃப் காலத்தில் ஏற்படும் பிரச்னைகள்
மிட் லைஃப் காலம் என்ற மத்திம காலம் என்பது 40 முதல் 60 வயது வரை நீள்கிறது. ஓரிரு ஆண்டுகள் முன்னதாகவும், பின்னதாகவும் இருக்கும். இந்த நிலையில் உள்ள பொதுவான நம்பிக்கை, இந்த காலகட்டத்தில் உங்களுக்கு உங்கள் அடையாளம் குறித்த வாழ்க்கை தேர்வுகள், நன்நெறிகள் ஆகியவை குறித்த மனக்குழப்பங்கள் ஏற்படும்.
மத்திம வயதில் ஏற்படும் பிரச்னைகளின் அறிகுறிகள் என்ன?
மத்திம வயதான 40 பிளஸில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை தோன்றும் என்று ஜேக்சன் மற்றும் டாக்டர வெட்டர் ஆகியோர் கூறுகிறார்கள். சிலருக்கு வெளியே குறைவாகவே தோன்றும், ஆனால் அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாது. சிலருக்கு, அதனால் உடல் ஆரோக்கிய குறைபாடு, பெருளாதார நெருக்கடி அல்லது உறவுச்சிக்கல் ஆகியவை ஏற்படும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னையை ஏற்படுத்தும் இந்த மிட் லைஃப் கிரைசிஸ் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
உங்கள் வாழ்வில் பல்வேறு மாற்றங்களையும் கொண்டுவரும் இந்த மத்திம வயதில் மனநிலையில் மாற்றம், உடல்நிலையில் மாற்றம், குடும்பத்தில் மாற்றம், பணியிடத்தில் மாற்றம், பொருளாதார ரீதியிலான மாற்றம் என தொடர் மாற்றங்கள் ஏற்பட்டு அல்லல்படுத்தும். குழந்தை பருவத்தில் ஏற்படும் துன்பங்களும் ஆபத்தை ஏற்படுத்தும் காரணிகளாகும்.
இந்த மத்திம வயது பிரச்னைகளை எப்படி கடப்பது. அதற்கு முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். வாழ்வில் ஒரு குறிக்கோளை வகுத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் மீதான அக்கறைக்கு முன்னுரிமை கொடுங்கள்
உங்கள் மீதான அக்கறை உங்களுக்கு பிடித்ததை செய்வதில் தொடங்கி, உங்கள் உடலை வலுப்படுத்தும் உடற்பயிற்சி செய்வதில் சென்று, பின்னர் உணவு, தூக்கம் என ஒவ்வொன்றையும் சரியாக்க வேண்டும். சரிவிகித உணவு, தேவையான அளவு உறக்கமும் வேண்டும்.
மத்திம வயதில் உங்கள் வாழ்வின் கோணம் மாற்றுங்கள், நன்றியுணர்வு பழகுங்கள்.
உங்களின் சாதனைகளை பாருங்கள்
மத்திம வயதில் ஒரு சிலர் தவறவிட்ட வாய்ப்புகள் குறித்து வருந்திக்கொண்டிருப்பார்கள். அதை எதிர்கொள்ள நீங்கள் உங்கள் சாதனைகைளை பட்டியலிடுங்கள். நீங்கள் கடந்து வந்த பாதைகள் குறித்து உங்களுக்கு கிடைத்த அங்கீகாரங்கள், விருதுகள் குறித்து சிந்தியுங்கள். நீங்கள் மற்றவர்கள் மீது ஏற்படுத்தியுள்ள நேர்மறையான தாக்கங்கள் குறித்து சிந்தியுங்கள். நீங்கள் எடுத்த விவேகமான முடிவுகள் குறித்து சிந்தியுங்கள். இழந்தவற்றைவிட உங்கள் சாதனைகள் உங்களை பலப்படுத்தும்.
நான் எவ்வாறு வளர்ந்தேன் என்று உங்களிடம் கேளுங்கள்
மத்திம வயதை சேர்ந்தவர்கள், அவர்களின் இளம் வயதைவிட மிகவும் சுதந்திரமானவர்களாகவும், பொறுப்பானவர்களாகவும், முடிவெடுக்கும் திறன் மிக்கவர்களாகவும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்களின் வெற்றிகளை பாருங்கள். அதே நேரத்தில் நீங்கள் முன்னேறுவதற்கான தேவையும் உள்ளதை ஒப்புக்கொள்ளுங்கள்.
உங்களின் பின்னடைவுகளை வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்றுங்கள்
நீங்கள் மத்திம வயது பிரச்னைகளுக்கு மத்தியில் நீங்கள் இருப்பதாக எடுத்துக்கொண்டால், அனைத்து பின்னடைவுகளையும் அனுபவிப்பீர்கள். ஆனால் அந்த பின்னடைவுகளை நீங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும். உங்கள் தொழிலில் பிரச்னைகள் ஏற்பட்டால், நீங்கள் புதிய திறனை வளர்த்துக்கொள்வீர்கள் என்று உங்களுக்கு சவால் விடுங்கள். உங்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி முன்னேறுங்கள். ஏதேனும் புதிய உடற்பயிற்சியை கையில் எடுத்து அதை செய்யுங்கள்.