Migraine : மைக்ரைனால் அவதிப்படுகிறீர்களா? இதோ பக்க விளைவில்லா சிகிச்சை முறைகள்!
தலைவலி தொடர்பான பிரச்னைகள் உலகில் மூன்றாவது பெரிய உடல் உபாதையாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவா தலைவலிக்கும், ஒற்றைத்தலைவலிக்கும் வித்யாசம் தெரியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே சரியான நோய் கண்டுபிடித்தலும், சிறப்பான சிகிச்சையும் ஒற்றைத்தலைவலிக்கு செய்யப்பட வேண்டும்.
ஒற்றைத்தலைவலி என்றால் என்ன?
ஒற்றைத்தலைவலி என்பது நரம்பியல் கோளாறு, இது தலையின் ஒருபுறத்தில் கடுமையான வலியை 4 முதல் 72 மணி நேரங்கள் வரை ஏற்படுத்துவது ஆகும். இதனுடன் சோர்வு, வாந்தி, மயக்கம், ஒளியை பார்க்க முடியாமல் போவது, ஒலியை கேட்க முடியாமல் போவது, பார்ப்பதில் சிரமத்தை ஏற்படுத்துவது, சிறிய விஷயங்கள் கூட செய்ய முடியாமல் போவது என கூடுதல் அறிகுறிகள் ஏற்படும். ஒற்றைத்தலைவலியை 4 வகையாகப்பிரிக்கலாம்.
ப்ரோட்ரோம், ஆரா, தலைவலி கட்டம், போஸ்ட்ட்ரோம் என்பதாகும். ப்ரோட்ரோம் 24 – 48 மணி நேரத்திற்கு முன்னர் துவங்கும். ஆரா கட்டம் பெரும்பாலான நோயாளிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக ஏற்படுகிறது. அப்போது பார்வை குறைபாடு, மயக்கம், உணர்தல் பிரச்னை மற்றும் விரல்களில் மரத்துப்போதல் ஆகியவை ஏற்படுகிறது. தலைவலி கட்டம், 4 முதல் 72 மணி நேரங்கள் வரை நீடிக்கிறது.
இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உணவு (ஆல்கஹால், காஃபியை கைவிட்டது) போன்றவையும் காரணமாகின்றன. ஹார்மோன் பிரச்னைகள் (மாதவிடாய், அதுதொடர்பான ஹார்மோன் பிரச்னைகள்), அதிகப்படியான உணர்ச்சி தூண்டல், மனஅழுத்தம், தவறான வாழ்க்கை முறை (நேரம் தவறி சாப்பிடுவது, சாப்பிடாமல் இருப்பது, தவறான உணவுப்பழக்கம், போதிய உடல் உழைப்பு இல்லாமை) ஆகிய அனைத்தும் காரணங்களாகின்றன.
மரபணுக்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றால் மூளையில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களும் இந்த ஒற்றைத்தலைவலிக்கு காரணமாகிறது. இதுதான் தலைவலிக்கும், ஒற்றைத்தலைவலிக்கும் உள்ள வேறுபாடு ஆகும். எனவே ஒரு நரம்பியல் நிபுணரிடம் இதை முன்னதாகவே உறுதிப்படுத்திக்கொண்டு அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
குடும்பத்தில் யாருக்கேனும் ஒற்றைத்தலைவலி உள்ளதா? மரபணு காரணமா? என்றும் நீங்கள் பார்க்க வேண்டும். சில உணவுகள், மனஅழுத்தம், ஹார்மோன் பிரச்னைகள் என எது ஒற்றைத்தலைவலிக்கு தூண்டுதலாக உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். இதை ஒரு டைரியில் நோயாளிகள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். எதனால் ஏற்படுகிறது என்பதை நோயாளிகள் பார்க்க வேண்டும்.
அதையும் குறித்துக்கொள்ள வேண்டும். ஒற்றைத்தலைவலி ஒருவரின் நாளையே சிதைத்துவிடும். அவர்களால் வேலை செய்யமுடியாது. பள்ளி செல்ல முடியாது. சமூக நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. சிலருக்கு தனிமை, பயம், பதற்றம், மனஅழுத்தம் என பிரச்னைகளை ஏற்படுத்தும். வேலை செய்ய முடியாமல் போவதும், ஆரோக்கியத்துக்கான செலவுகள் என இது ஒரு பொருளாதார சுமையை கொடுக்கும்.
சிசிக்சை
மருந்தில்லாமல் சில நரம்பியல் கருவிகள் மூலம் சிகிச்சைகள் கொடுக்கப்படும். இது மருந்து உதவாத நபர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இது வளர்ந்தவர்கள், பெண்கள், வயோதிகளுக்கு செய்யப்படுகிறது. மருந்தை தவிர்க்க விரும்புபவர்களுக்கும் இது உதவும்.
இதன் மூலம் அடிக்கடி ஒற்றைத்தலைவலி வருவதை தடுக்கலாம். நோயின் தீவிரத்தை குறைக்கலாம். ஒற்றைத்தலைவலி ஏற்படும் கால அளவையும் குறைக்கலாம். இதன்மூலம் பக்க விளைவுகள் கொஞ்சம் குறையும். நியுரோமாடுலேசன், மற்றுமொரு சிகிச்சை முறை, நரம்பு மண்டலத்தில் கொடுக்கப்படும் எலக்ட்ரிக்கல் மற்றும் மேக்னடிக் தூண்டுதல் ஆகும்.
ரிமோட் எலெக்ட்ரிக்கல் நியூரோமாடுலேசன் என்று பொருத்திக்கொள்ளக்கூடிய கருவி, ஒரு ஆப்பும் சிகிச்சைக்கு பயன்படுகிறது. இதுவும் பாதுகாப்பான சிகிச்சை. குறைவான பக்கவிளைவுகளைக்கொண்டது. ஒற்றைத்தலைவலியால் பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சிகளும், சிகிச்சைகளும் அதிகம் வேண்டும்.
இது ஒரு குறைபாடு. இதற்கு சரியான நோய் கண்டறிதல் மற்றும் சரியான சிகிச்சை மூலம் பயன்பெற முடியும். மேலும் இதுகுறித்த கட்டுக்கதைகள் களையப்படவேண்டும்.